கடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் இருந்த கூட்டணியே தற்போதும் தொடரும் ; முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
அதிமுக கூட்டணி குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி அளித்தார்.
சென்னை ராயபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ராயபுரம் மற்றும் திருவிக நகர் தொகுதி நகராட்சி தேர்தலுக்கான அதிமுக விருப்பமனு விநியோகம் நடக்கும் பணிகளை அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் ஆய்வு மேற்கொண்டு விருப்பமனு வழங்கியவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார். அப்போது நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது,
தமிழகத்தில் நடைபெற உள்ள ஊராட்சி தேர்தல் முறையாக ஜனநாயக முறைப்பட நடத்தப்பட வேண்டும். கடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் யாருடன் கூட்டணி இருந்ததோ அதே கூட்டணியே தற்போதும் தொடர்ந்து வருகிறது. நேற்றைய நிலையையும், இன்றைய நிலையையும் என்னால் கூற முடியும். நாளைய நிலையை என்னால் கூற இயலாது.
ஜிஎஸ்டி கவுன்சிலில் மாநில உரிமைகள் குறித்து திமுக என்ன குரல் கொடுத்துள்ளது. ஒரு பெண் இரவு 12 மணிக்கு முழு நகை அணிந்து சாலையில் நடந்து செல்கிறாரோ அன்று தான் முழு சுதந்திரம் என கூறினார். ஆனால் தற்போதைய திமுக ஆட்சியில் காவல் பணி செய்யும் காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லாத நிலை இருந்து வருகிறது.
அதிமுகவின் தொண்டனாக இருக்கும் எங்களுக்கு கட்சி பணி, தேர்தல் பணி என பல வேலைகள் உள்ளன. எனவே சசிகலாவை பற்றி பேச வேண்டிய தேவையில்லை.
நேற்று நடந்த அதிமுக கூட்டத்தில் எந்த வித பிரச்சனையும் நடக்கவில்லை. அனைத்து கட்சியினரும் மகிழ்ச்சியாக கூட்டத்திற்கு வந்தனர். மகிழ்ச்சியாகவே கூட்டத்தை முடித்து சென்றோம். ஒரு சில மாவட்டங்களில் உள்ள பிரச்சனைகள் இருப்பதை பற்றி பேசினோம்.
திமுக காழ்ப்புணர்ச்சியுடன் இருப்பதாலேயே கலைஞர் உணவகம் கொண்டு வர திட்டமிட்டுள்ளது. திமுகவினர் கலைஞர் பெயர், ஸ்டாலின் பெயர் என யார் பெயரில் வேண்டுமென்றாலும் உணவகங்களை திறந்து கொள்ளட்டும். ஆனால் இதனை திறந்து அம்மா உணவகங்களை மூடினால் அதிமுக சும்மா இருக்காது.
ஆட்சியில் இல்லாதபோது ஒரு பேச்சு, ஆட்சியில் இருக்கும்போது ஒரு பேச்சு என பச்சொந்தி தனமான பேச்சை திமுக பேசி வருகிறது. தேர்தலின்போது ஒரு வாக்குறுதி கொடுத்துவிட்டு ஆனால் அதன்பின் செய்யும் செயல்கள் அதற்கு மாற்றாகவே உள்ளது இவ்வாறு அவர் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu