/* */

தமிழகத்தில் அதிமுக தான் முக்கிய எதிர்கட்சி: முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் பேட்டி

சென்னை வண்ணாரபேட்டை தங்கசாலை பகுதியில் நடைபெற்ற வாக்காளர் சிறப்பு முகாமை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பார்வையிட்டார்.

HIGHLIGHTS

தமிழகத்தில் அதிமுக தான் முக்கிய எதிர்கட்சி:   முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் பேட்டி
X

செய்தியாளர் சந்திப்பின் நடுவே அவ்வழியாக சென்ற இறுதி ஊர்வலத்திற்கு எழுந்து சென்று மரியாதை செலுத்திய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.

சென்னை வண்ணாரப்பேட்டை தங்கசாலை பகுதியில் நடைபெற்ற வாக்காளர் சிறப்பு முகாமை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பார்வையிட்டார். அப்போது நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது,

தமிழ்நாட்டை பொறுத்தவரை டீசல் விலை குறைப்பு தொடர்பாக அரசு வாய் திறக்கவில்லை. நிதியமைச்சர் போகாத ஊருக்கு வழி தேடுவது போல் அறிக்கை வெளியிட்டுள்ளார். தேர்தலின்போது கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றவில்லை. அவசரப்பட்டு வாக்குறுதி கொடுத்து ஏமாற்றினோம் என நிதியமைச்சர் சொல்லிவிட்டு போகலாம். அதைவிடுத்து மக்களை முட்டாளாக்குகிறார்.

தமிழ்நாட்டில் சிறந்த எதிர்க்கட்சியாக அதிமுக செயல்படுகிறது. மக்கள் பிரச்சினைக்காக பல போராட்டங்களை முன்னெடுத்து இருக்கிறது. பாஜக கட்சியை வளர்க்க அவர்கள் பாடுபடுகின்றனர். ஆனால் அதிமுக தான் பிரதான எதிர்க்கட்சி. நிதி நெருக்கடி இருந்தாலும் கூட பொங்கல் பரிசு தொகுப்புடன் நிதியை வழங்கியது அதிமுக அரசு. அதிமுக ரூ.2500 கொடுத்தது திமுக ரூ.3000 கொடுக்க வேண்டும் என செயல்பட்டால் தானே திமுக திறமையான அரசு. திமுக அரசுக்கு நிதி மேலாண்மை குறித்து தெரியவில்லை.

ஆன்லைன் மூலம் தேர்வு என்பது மாணவர்களின் நியாயமான கோரிக்கை. மாணவர்களை ஏமாற்றும் நடவடிக்கையில் திமுக அரசு ஈடுபடுகிறது. இந்த செமஸ்டர் தேர்வினை ஆன்லைன் மூலம் நடத்த வேண்டும் என்ற மாணவர்களுடைய கோரிக்கை நியாயமானது. மாணவர்களின் கோரிக்கையை ஏற்று இந்த ஒரு முறை ஆன்லைன் தேர்வு என்பதை அரசு ஏற்க வேண்டும்.

ரோம் நகர் தீ பற்றி எறியும் போது மன்னன் பிடெல் வாசித்தார் என்பது போல சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பாராட்டு விழா நடத்துகிறார் முதலமைச்சர். முன்னாள் முதல்வர் கலைஞரை போல மக்கள் பாதிப்பில் இருக்கும் பொழுது பாராட்டு விழாவில் கலந்து கொண்டு மு க ஸ்டாலின் பாராட்டு விழாவில் சிக்ஸர் அடித்ததாக கூறுகிறார். ஆனால் யார் சிக்ஸர் அடித்தது என்று மக்கள் தான் சொல்ல வேண்டும்.

பெருவெள்ளத்தில் விவசாயிகள் மீனவர்கள் நெசவுத் தொழிலாளர்கள் வியாபாரிகள் என அனைவரும் போல்ட் ஆகி விட்டனர். வார்டு வரையறையை திமுக தனக்கு சாதகமாக தேர்தல் ஆணையத்துடன் கூட்டு சேர்ந்து செயல்படுத்தி கொண்டது. திமுக வலுவிழந்து காணப்படும் தெருக்களை மற்றொரு வார்டு உடன் இணைத்து தங்களுக்கு சாதகமான பகுதியில் இணைத்துள்ளது என அவர் தெரிவித்தார்.

செய்தியாளர் சந்திப்பின் நடுவே அவ்வழியாக சென்ற இறுதி ஊர்வலத்திற்கு எழுந்து சென்று மரியாதை செய்துவிட்டு மீண்டும் செய்தியாளர்களை சந்தித்தார்.

Updated On: 22 Nov 2021 2:02 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    கில்லி பட பேனர் கிழிப்பு! மன்னிப்பு வீடியோ வெளியிட்ட அஜித் ரசிகர்!
  2. திருச்சிராப்பள்ளி
    மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்புகள் தானம்; அரசு மரியாதையுடன்...
  3. லைஃப்ஸ்டைல்
    நீரிழிவு நோயாளிகள் நிலக்கடலை சாப்பிடலாமா? தெரிஞ்சுக்கங்க..!
  4. கோவை மாநகர்
    கோவையில் மழை வேண்டி சிறப்பு தொழுகை: மரக்கன்றுகள் வழங்கிய தமுமுக
  5. ஈரோடு
    மே தினத்தில் விடுமுறை அளிக்காத 81 நிறுவனங்கள் மீது வழக்கு
  6. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. நீலகிரி
    கோடை சீசன் துவக்கம். நீலகிரியில் போக்குவரத்து மாற்றம்!
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. மாதவரம்
    கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது
  10. ஈரோடு
    பவானி அருகே சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்த அரசுப் பேருந்து