சென்னை இந்தியன்ஆயில் பவனில் குடியரசு தினக் கொண்டாட்டம்

சென்னை இந்தியன்ஆயில் பவனில் குடியரசு தினக் கொண்டாட்டம்
X
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்தியன்ஆயில் பவனில், தேசிய மூவர்ணக் கொடியை ஏற்றி குடியரசு தினம் கொண்டாடினர்.

இந்தியன் ஆயில் செயல் இயக்குநர் (வட்டார சேவைகள்) K.சைலேந்திரா, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்தியன்ஆயில் பவனில், இந்தியக் குடியரசுத் திருநாளன்று தேசிய மூவர்ணக் கொடியை மூத்த அதிகாரிகள் முன்னிலையில் ஏற்றி வைத்தார்.

K.சைலேந்திரா., தமது சிறப்புரையில் கூறியதாவது - இந்த ஆண்டின் கருப்பொருளான பசுமையான வருங்காலத்தை வடிவமைத்தல் என்பது உணர்த்துவதற்கு ஏற்ப பசுமை ஆற்றலை நோக்கி நாம் முன்னேறிக் கொண்டிருக்கிறோம் என்பதே உண்மை. 2030 ஆண்டிற்குள், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஆதாரத்தைப் பொறுத்த வரை, 500 GW என்கிற இலட்சியப்பூர்வ இலக்கை அரசாங்கம் நிர்ணயித்துள்ளது. இந்த முன்முயற்சிக்கு உறுதுணை புரியும் வகையில் இந்தியன்ஆயில் நிறுவனம், தங்களுடைய பசுமை ஆற்றல் ஆதார அளவைப் பெருக்கும் நடவடிக்கைகளில் அயராது ஈடுபட்டு வருகிறது. அரசு அறிவித்துள்ளவாறு இந்தியாவில் அமைக்கப்பட உள்ள 10000 EV சார்ஜ் செய்யும் நிலையங்களில் 50% பங்களிப்பு நம்முடையதாக இருக்க, 5000 EV சார்ஜ் செய்யும் நிலையங்களை நாம் அமைக்க உள்ளோம்.


தூய்மையான மற்றும் நம்பகமான ஆற்றல் ஆதார வளமாக ஹைட்ரஜன் உள்ளது. அந்த ஆற்றல் போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு பயன்பாடுகளுக்கு உபயோகிக்கலாம். ஹைட்ரஜன், தேசத்திற்கு ஆற்றல் பாதுகாப்பை உறுதி செய்யும் என்பது ஒரு புறமிருக்க, ஃபயூவல் செல் ஊர்திகளில் அதனைப் பயன்படுத்துவதால் விளையும் சுற்றுச்சூழல் நன்மைகள் ஏராளம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் பேசுகையில் தெரிவித்தாவது - ஹைட்ரஜன் சார்ந்த முன் எடுப்புகளில் இந்தியன்ஆயில் நிறுவனம் முன்னோடியாக செயல்பட்டு ஹைட்ரஜன் அடிப்படையிலான போக்குவரத்து தீர்வுகளை நோக்கி நாட்டை நகர்த்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.

இந்தியன்ஆயில் நிறுவனம், 15 பாலிமர் எலக்ட்ரோலைட் மெம்ப்ரேன் (PEM) ஃப்யூவல் செல் பேருந்துகள் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தப்புள்ளிகளை வரவேற்றுள்ளது. இந்த செயல்திட்டத்தின் முக்கிய சிறப்பம்சம் - தற்சார்பு இந்தியா-ஆத்மநிர்பர் பாரத் என்பதை நனவாக்கும் வகையில் ஃப்யூவல் ஸ்டேக்/சிஸ்டம் தொழில்நுட்பமானது உள்நாடு சார்ந்து வடிவமைக்கப்பட்டு உற்பத்தி செய்யப்படும் என்றார்.

தற்போதைய பெருந்தொற்று தொடர்பான கட்டுப்பாடு காரணமாக, ஊழியர்கள், ஜும் வழியாக நிகழ்ச்சியைக் கண்டு களித்தனர். இந்தியன்ஆயில் நிறுவனத்தின் பாதுகாப்பு பிரிவினர் அணிவகுப்பு பேரணியை நடத்தினார்கள். இணையம் வாயிலாக, முறையே 25 மற்றும் 30 ஆண்டுகள் பணிக் காலத்தை நிறைவு செய்த ஊழியர்களுக்கு நீண்ட கால பணிச் சேவை விருதுகள் வழங்கப்பட்டன. இந்தியன்ஆயில் நிறுவன குடும்ப அங்கத்தினர்களின் உள் வட்டத் திறமையாளர்களால் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil