ரேஷன் கார்டு வைத்திருப்பவரா நீங்கள்? இதோ முக்கிய அறிவிப்பு!
ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது தற்போது தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு. இதன்படி உங்கள் ரேஷன் கார்டில் ஏதேனும் அப்டேட் செய்ய விரும்பினால் இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ள முடியும்.
ரேஷன் அட்டை என்பது நடுத்தர, வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள ஏழை எளிய மக்களுக்கு அரசு தரப்பிலிருந்து வழங்கப்படும் அட்டை. இதன் மூலம் நாம் நியாய விலைக் கடைகளில் இலவசமாகவும் மலிவு விலையிலும் பொருட்களை வாங்க முடியும். ரேஷன் கடைகளில் அரிசு இலவசமாகவும், பருப்பு, எண்ணெய், சீனி உள்ளிட்ட பொருட்கள் சலுகை விலையிலும் கிடைக்கும். பொங்கல் பரிசு தொகுப்பு ஒவ்வொரு ஆண்டும் அறிவிக்கப்படுவதற்கு ஏற்ப கிடைக்கும். தற்போது தமிழக அரசு முடிவு செய்துள்ள திட்டமான மகளிர் உரிமைத் தொகையும் இதன் மூலமே பெறமுடியும்.
பொது விநியோகத் திட்டத்தின் மூலம் இந்தியா முழுவதும் இது போன்ற ஏற்பாடு நடந்து வந்தாலும் தமிழகம் இதிலும் முன்னோடியாக இருக்கிறது. அதேநேரம் இங்குள்ள மக்கள் ரேஷன் அட்டைகளை ஸ்மார்ட் கார்டுகளாக தரம் உயர்த்தி தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கு ஏற்ப அதனையும் டிஜிட்டமயமாக்கியிருக்கிறார்கள். ஆன்லைனிலேயே நாம் பல விசயங்கள் சேர்க்கவும் திருத்தவும் நீக்கவும் முடியும்.
அதேசமயம் ஆன்லைன் பற்றிய விவரமில்லாமல் இருப்பவர்களுக்காக அரசாங்கமே குறை தீர்ப்பு முகாம்களை மாதம் தோறும் நடத்தி வருகின்றது. இதில் தற்போது ஏப்ரல் 8ம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணிவரையில் மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடக்க இருக்கிறது.
சென்னையில் உள்ள 19 மண்டல உதவி ஆணைர் அலுவலகங்களில் இந்த குறை தீர் முகாம் நடைபெறுகிறது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை நிவர்த்தி செய்யமுடியும். இதற்கான அறிவிப்பை தமிழ் நாடு கூட்டுறவு மற்றும் உணவு வழங்கல் துறை வெளியிட்டுள்ளது.
இந்த முகாமில் பொதுமக்கள் தங்களது குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைப்பேசி எண் பதிவி, மாற்றம் செய்தல் , புதிய குடும்ப அட்டை, நகல் குடும்ப அட்டை கோரும் மனுக்களை பதிவு செய்தல் ஆகிய சேவைகளைப் பெற முடியும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu