ராஜீவ்காந்தி மருத்துவமனையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து என தகவல்.

ராஜீவ்காந்தி மருத்துவமனையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து என தகவல்.
X
மருத்துவமனையின் பழைய கட்டிடத்தில் தான் தீ விபத்து - நோயாளிகள் யாரும் இல்லை - மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் தகவல்.

சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையின் பழைய கட்டிடத்தில் தான் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அங்கு நோயாளிகள் யாரும் இல்லை - மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல்.

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தீ விபத்து. தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சம்பவ இடத்தில் மீட்புப் பணியைப் பார்வையிட்டு வருகிறார். சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி வருகின்றனர்.


சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையின் 2-வது டவர் பிளாக்கின் பின்புறம் உள்ள கல்லீரல் அறுவை சிகிச்சைப் பிரிவில் இன்று காலை சுமார் 11 மணியளவில் திடீரென தீப்பிடித்தது. இதனைத் தொடர்ந்து, 4 தீயணைப்பு வாகனங்களும், குடிநீர் வாரியத்தின் தண்ணீர் லாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன.

தீ விபத்து ஏற்பட்டுள்ள கட்டடத்தில் இருந்து கரும்புகை வெளியேறியதோடு சிலிண்டர்கள் வெடிக்கும் சத்தம் கேட்டதால் பதற்றம் ஏற்பட்டது. தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

அறுவை சிகிச்சை அறையில் இருந்த ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில் மருத்துவ உபகரணங்கள் வைக்கப்பட்டிருந்த அறையிலிருந்து மின் கசிவு காரணமாக தீ விபத்து நேரிட்டதாக இருவேறு காரணங்கள் சொல்லப்படுகிறது.


தீ விபத்து நடைபெற்ற கட்டடத்தில் இருந்து 32 நோயாளிகள் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும், தீயை கட்டுக்குள் கொண்டு வந்த பின்னரே முழு விவரங்கள் தெரியவரும் எனவும் அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!