அண்ணா பல்கலையில் இணைப்பு பெற்ற கல்லூரிகளின் பட்டியல் வெளியீடு

அண்ணா பல்கலையில் இணைப்பு பெற்ற கல்லூரிகளின் பட்டியல் வெளியீடு
X
அண்ணா பல்கலைக் கழகத்தில் இணைப்பு பெற்றுள்ள பொறியியல் கல்லூரிகளின் பட்டியலை, அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

அண்ணா பல்கலைக் கழகத்தில் இணைப்பு பெற்றுள்ள பொறியியல் கல்லூரிகளின் பட்டியலை, அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் இயங்கி வரும் அண்ணா பல்கலைக்கழகம், அகில இந்திய மற்றும் உலக அளவில், தொழில்நுட்பக் கல்வியில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்த பல்கலைக் கழகத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை 550 தனியார் பொறியியில் கல்லூரிகள் இணைப்பு பெற்று இயங்கி வந்தன. இந்த ஆண்டு 440 கல்லூரிகள் மட்டுமே இயங்க அங்கீகாரம் பெற்றுள்ளதாக தெரிகிறது.

தற்போது, பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கவுன்சலிங் தொடங்க உள்ள நிலையில், அண்ணா பல்கலையில் இணைப்பு பெற்ற கல்லூரிகள், அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளை மாணவர்கள் தேர்வு செய்வதற்கு வசதியாக கல்லூரிகளின் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் தனது இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது.

இந்த கல்லூரிகளின் விவரங்கள், பாடப்பிரிவுகள், எத்தனை இடங்கள் உள்ளன என்பன உள்ளிட்ட விவரங்கள் பட்டியலில் உள்ளன. கல்லூரிகளை தேர்வு செய்ய விரும்பும் மாணவ, மாணவியர் http://www.annauniv.edu/cai என்ற இணையதளத்தில் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!