சென்னை மெட்ரோ இரயில் நிலையங்களுக்கு பிளாட்டினம் பசுமை சான்றிதழ்

சென்னை மெட்ரோ இரயில் நிலையங்களுக்கு பிளாட்டினம் பசுமை சான்றிதழ்
X

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் மெட்ரோ இரயில் நிலையங்களுக்கு பிளாட்டினம் பசுமை சான்றிதழ் வழங்கப்பட்டது.

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் மெட்ரோ இரயில் நிலையங்களுக்கு பிளாட்டினம் பசுமை சான்றிதழ் வழங்கப்பட்டது.

இந்திய தொழில் கூட்டமைப்பின் (CII) ஒரு பகுதியான இந்திய பசுமை கட்டுமான கவுன்சில்(IGBC) 2001 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது, 2025 ஆம் ஆண்டிற்குள் நிலையான கட்டட சூழலைஉருவாக்குவதே IGBC-இன் நோக்கமாகும். பசுமை கட்டுமான இயக்கத்தின் வளர்ச்சி காரணமாக, IGBCபுதிய மற்றும் தற்போதுள்ள கட்டிடங்கள், உட்புறங்கள், சுகாதாரம், பள்ளிகள், தொழிற்சாலை கட்டிடங்கள், பசுமை நகரங்கள், இயற்கைக்காட்சிகள் மற்றும் வெகுஜன விரைவு போக்குவரத்து முறை ஆகியவற்றிற்கானபிரிவுகள் தொடங்கப்பட்டன. ​

இந்திய பசுமை கட்டுமான கவுன்சில் (IGBC) இரயில் அடிப்படையிலான MRTS இன் வடிவமைப்பு, கட்டுமானம் மற்றும் செயல்பாட்டில் பசுமை கருத்துகளை ஊக்குவிப்பதற்காக IGBC Green Mass Rapid Transit System மதிப்பீட்டு முறையை தொடங்கியது. இந்த மதிப்பீட்டு முறை, தள தேர்வு மற்றும்திட்டமிடல், நீர் திறன், எரிசக்தி திறன், பொருள் பாதுகாப்பு, உட்புற சூழல், வசதி, வடிவமைப்பு மற்றும்கட்டுமானத்தில் புதுமை ஆகியவற்றில் அவற்றின் பசுமை அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு MRTSதிட்டங்களை மதிப்பீடு செய்கிறது.

இந்தியாவின் மிக உயர்ந்த பசுமை கட்டுமான திட்டமான IGBC சான்றிதழ் வழங்கும் நிகழ்வில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் கட்டம் I மற்றும் கட்டம் I நீட்டிப்பில் உள்ள 40 மெட்ரோ இரயில்நிலையங்களுக்கும் பிளாட்டினம் மதிப்பீட்டின் மிக உயர்ந்த தரச்சான்றிதழைப் பெற்றுள்ளது. (21 உயர்நிலைமெட்ரோ இரயில் நிலையங்கள் மற்றும் 19 சுரங்கப்பாதை மெட்ரோ இரயில் நிலையங்கள்).

நவம்பர் 25, 2023 அன்று சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்ற விழாவில், சர்வதேச மற்றும்தேசிய பார்வையாளர்கள் முன்னிலையில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் சார்பாக திட்டஇயக்குநர் டி.ஆர்ச்சுனன் இந்த விருதைப் பெற்றுக்கொண்டார்.

ஓட்டுனர் இல்லா மெட்ரோ இரயில்களை உருவாக்க ரூ.269 கோடி மதிப்பில் ஒப்பந்தம்

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், ஒட்டுனர் இல்லாமல் இயக்கப்படும் 3 பெட்டிகளை கொண்ட10 மெட்ரோ இரயில்களை (மொத்தம் 30 பெட்டிகள்) வழங்குவதற்கான துணை ஒப்பந்தத்தை அல்ஸ்டோம்டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனத்திற்கு ரூ.269 கோடி மதிப்பில் (வரிகள் உட்பட) வழங்கியுள்ளது.

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் இயக்குனர் திரு. ராஜேஷ் சதுர்வேதி (அமைப்புகள்மற்றும் இயக்கம்) மற்றும் அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனத்தின் வர்த்தக இயக்குனர் திரு.ராஜீவ் ஜோய்சர் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்நிகழ்ச்சியில், சென்னை மெட்ரோ இரயில்நிறுவனத்தின் தலைமை பொது மேலாளர் ஏ.ஆர்.ராஜேந்திரன் (தொடர்வண்டி மற்றும் இயக்கம்), உயர்அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.

சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம்-II இன் கீழ், ஒட்டுனர் இல்லாமல் இயக்கப்படும் 3 பெட்டிகளை கொண்ட 26 மெட்ரோ இரயில்களை (மொத்தம் 78 பெட்டிகள்) உருவாக்கும் ஒப்பந்தம்(ARE-03A) அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனத்திற்கு ரூபாய் 946 கோடியே 92 லட்சம்மதிப்பில் (வரிகள் உட்பட), கடந்த ஆண்டு 2022, நவம்பர் 17-ஆம் தேதி வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து 27.11.2023 துணை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் மூலம் அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட்இந்தியா நிறுவனம் கூடுதலாக 3 பெட்டிகளை கொண்ட 10 மெட்ரோ இரயில்கள் (மொத்தம் 30 பெட்டிகள்)என மொத்தம் 36 மெட்ரோ இரயில்களை (மொத்தம் 108 பெட்டிகள்) வழங்கும்.

இந்த ஒப்பந்தத்தில், வடிவமைப்பு, உற்பத்தி, சோதனை, தரமான மெட்ரோ இரயில்இயக்குதலுக்கான தகுதி, பணியாளர்களுக்கு பயிற்சி, உதிரி பாகங்கள் வழங்கல் மற்றும் குறைபாடுபொறுப்பு உள்ளிட்ட ஒட்டுனர் இல்லாத மெட்ரோ இரயில்களை வழங்குதல் போன்றவை உள்ளடங்கும்.

இந்த ஒப்பந்ததின் கீழ், மெட்ரோ இரயில்கள் 28 மாதங்களில் சென்னை மெட்ரோ இரயில்நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும். வழித்தடம்-4-ல் பூந்தமல்லியில் கட்டப்பட்டு வரும் பணிமனையில்மெட்ரோ இரயில்கள் பராமரிக்கப்பட்டு இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!