முதல்வர் மருமகன் சபரீசன் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது

முதல்வர் மருமகன் சபரீசன் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது
X
நீலாங்கரையில் உள்ள தமிழக முதலமைச்சரின் மருமகன் சபரீசன் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டார்

சென்னை கிழக்கு கடற்கரை சாலை, நீலாங்கரை கபாலீஸ்வரர் நகரில் சபரீசன் வீடு உள்ளது. இன்று 1.30 மணிக்கு மேல் தலைமை செயலக கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு அழைத்த மர்மநபர் சபரீசன் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனை தொடர்ந்து நீலாங்கரை போலீசார் மற்றும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். பின்னர் அழைத்த செல்போன் எண்ணை வைத்து வேளச்சேரியை சேர்ந்த வாசுதேவன்(62), என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா