கொள்ளை சம்பவத்தில் கைதானவர் 2014 சென்னை சென்ட்ரல் குண்டுவெடிப்பு வழக்கில் சம்பந்தப்பட்டவர்

கொள்ளை சம்பவத்தில் கைதானவர் 2014 சென்னை சென்ட்ரல் குண்டுவெடிப்பு வழக்கில் சம்பந்தப்பட்டவர்
X
சென்னையில் நகைக்கடை உரிமையாளரிடம் கொள்ளையடித்த சம்பவத்தில் கைதானவர் சென்னை சென்ட்ரல் குண்டுவெடிப்பு வழக்கில் சம்பந்தப்பட்டவர் என தெரிய வந்துள்ளது

சென்னையில் மே 5 அன்று ஐந்து பேர் கொண்ட கும்பல் ஒன்று நகைக்கடைக்காரரை வழிமறித்து தாக்கி தங்கத்தை கொள்ளையடித்தனர். கடை உரிமையாளரின் புகாரின் பேரில், பெரியமேடு காவல்துறையினர் குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதற்காக தேடுதல் வேட்டை நடத்தினர். சம்பவம் நடந்த இடத்தில் சிசிடிவி காட்சிகளில் அவர்கள் பயன்படுத்திய வாகனத்தின் நம்பர் பிளேட்டின் உதவியுடன், யாசின் என்பவர் அல்லிக்குளம் பகுதியில் கைது செய்யப்பட்டார். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், அவரது கூட்டாளி ரஃபியை கைது செய்தனர்.

ரஃபியிடம் விசாரித்தபோது, 2014ம் ஆண்டு சென்ட்ரல் ரயில் நிலைய குண்டுவெடிப்பு வழக்கில் ரஃபி ஒரு சந்தேகநபர் என்றும், அவருக்கு எதிராக ஒரு வருடம் ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் நிலுவையில் இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

ரஃபியிடமிருந்து சுமார் 75 கிராம் தங்கம், ஒரு கார் மற்றும் இரு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டன, பின்னர் அவர் செங்கல்பட்டு உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ரிமாண்ட் செய்யப்பட்டார். அவர் மீது கள்ள நோட்டு மோசடி உட்பட பல வழக்குகள் இருகின்றன.

இந்த கொள்ளையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மேலும் மூன்று நபர்களை தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

2014 மே 1ஆம் தேதி பரபரப்பான சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பெங்களூர்-குவஹாத்தி ரயிலின் இரண்டு பெட்டிகளில் ஐந்து நிமிட இடைவெளியில் இரண்டு குறைந்த தீவிரம் கொண்ட குண்டுகள் வெடித்ததில் ஒரு பெண் கொல்லப்பட்டார் மற்றும் 14 பேர் காயமடைந்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!