சென்னை புளியந்தோப்பில் கள்ளக்காதலி வீட்டில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

சென்னை புளியந்தோப்பில் கள்ளக்காதலி வீட்டில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை
X
சென்னை புளியந்தோப்பில் கள்ளக்காதலி வீட்டில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை புளியந்தோப்பு நெடுஞ்சாலை பகுதியை சேர்ந்தவர் ஆயிஷா (வயது 26 )இவருக்கு ஜான் பாஷா என்பவருடன் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளது.ஆயிஷாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரது கணவர் ஜான் பாஷா பிரிந்து சென்றுவிட்டார். அதன்பிறகு ஆயிஷா செங்குன்றம் பகுதியைச் சேர்ந்த ஏசி மெக்கானிக் காலித் பாஷா( 26) என்பவருடன் திருமணம் செய்து கொள்ளாமல் குடும்பம் நடத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக காலித் பாஷாவுக்கும் ஆயிஷாவுக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. நேற்றிரவு குடிபோதையில் வந்த காலித் பாஷா ஆயிஷாவுடன் சண்டை போட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதன்பிறகு இருவரும் தூங்கி விட்டனர்.அதிகாலை 4 மணியளவில் ஆயிஷா எழுந்து பார்த்தபோது காலித் பாஷா புடவையால் தனக்குத் தானே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் புளியந்தோப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார் காலித் பாஷாவின சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் காலித்பாஷாவின் உறவினர்கள் காலித் பாஷாவின் மரணத்திற்கு ஆயிஷா தான் காரணம் அவரை கைது செய்ய வேண்டும் என புளியந்தோப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்..

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!