சென்னை வியாசர்பாடியில் மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு

சென்னை வியாசர்பாடியில் மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு
X
சென்னை வியாசர்பாடியில் துணி துவைக்க வாஷிங் மிஷின் ஸ்விட்ச் போட்ட போது, மின்சாரம் தாக்கி பெண்மணி பலியானார்.

சென்னை வியாசர்பாடி அண்ணா நகர் 1வது தெரு பகுதியை சேர்ந்தவர் லட்சுமி, வயது ௫௨. இவருக்கு திருமணம் ஆகவில்லை. சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். தனது தாய் மற்றும் அண்ணன் உடன் வசித்து வருகிறார். நேற்று காலை 11 மணியளவில், துணி துவைக்க தண்ணீர் கையுடன் சுவிட்ச் போடும்போது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார்.

லட்சுமியின் அலறல் சத்தம் கேட்டு அவரது அண்ணன் கோவிந்தன் என்பவர் அவரை மீட்டு அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். மருத்துவர்கள் உடனடியாக அவரை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அறிவுறுத்தினர். அதன் பேரில் ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அப்போது மருத்துவர்கள் லட்சுமியை பரிசோதனை செய்து அவர் வரும்வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். செம்பியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!