எம்கேபி நகரில் திருடன் பிடிபட்டான் திருடு போன நகையும் பறிமுதல்

எம்கேபி நகரில் திருடன் பிடிபட்டான் திருடு போன நகையும் பறிமுதல்
X

எம்கேபி நகரில் வீடு புகுந்து திருடிய பாலமுருகன் 

கைரேகை நிபுணர்களின் உதவியுடன் எம்கேபி நகரில் திருடன் பிடிபட்டான் திருடுபோன நகையும் பறிமுதல்.

சென்னை எம்கேபி நகர் நார்த் அவன்யூ பத்தாவது பிளாக் பாரி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி. இவர் அண்ணா சாலையில் உள்ள வங்கியில் வேலை செய்து வருகிறார். கடந்த 10-ஆம் தேதி மாலை காஞ்சிபுரத்தில் உள்ள தனது உறவினர் வீட்டில் புதுமனை புகுவிழா நிகழ்ச்சிக்கு குடும்பத்துடன் சென்றிருந்தார்.

நேற்று காலை இவரது பக்கத்து வீட்டில் இருக்கும் செல்வராஜ் என்பவர், நடைபயிற்சி சென்ற போது மூர்த்தியின் வீட்டின் கதவு திறந்து இருப்பதை பார்த்து மூர்த்திக்கு தகவல் தெரிவித்தார். மூர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, வீட்டில் பீரோவில் இருந்த இரண்டு சவரன் தங்க நகை 40 ஆயிரம் ரூபாய் பணம் உள்ளிட்டவை காணாமல் போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து எம்கேபி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

எம்கேபி நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்தனர் மேலும் கைரேகை நிபுணர்களை வரவழைத்து திருடனின் கைரேகை பதிவுகளை எடுத்தனர். இதில் ஏற்கனவே சில குற்ற வழக்குகளில் தொடர்புடைய ஒருவரின் கைரேகை ஒத்துப்போனது

இதனையடுத்து கன்னிகாபுரம் கஸ்தூரிபாய் காலனி பகுதியை சேர்ந்த பாலமுருகன் என்ற நபரை பிடித்து போலீசார் விசாரணை செய்ததில், வீடு புகுந்து திருடியதை அவன் ஒப்புக் கொண்டார். இதனையடுத்து அவரிடமிருந்து 2 சவரன் தங்க நகை பறிமுதல் செய்யப்பட்டது. திருடுபோன பணத்தில் 10 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்த எம்கேபி நகர் போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story