கொடுங்கையூரில் காய்கறி வியாபாரி வெட்டிக்கொலை: மனைவி மருத்துவமனையில் அனுமதி

கொடுங்கையூரில் காய்கறி வியாபாரி வெட்டிக்கொலை: மனைவி மருத்துவமனையில் அனுமதி
X

கோபி.

கொடுங்கையூரில் காய்கறி வியாபாரி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கொடுங்கையூர் எருக்கஞ்சேரி ராஜீவ்காந்தி தெரு 3வது பிரதான சாலையை சேர்ந்தவர் கோபி 51. இவர் கொடுங்கையூர் முத்தமிழ் நகர் தெற்கு அவன்யூ பகுதியில் காய்கறி கடை நடத்தி வருகிறார். இவருக்கு திருமணமாகி லதா என்ற மனைவியும் இரண்டு பெண் பிள்ளைகளும் உள்ளனர்.

அதே பகுதியில் குப்பன் என்பவரின் மகன்கள் ஆனந்த் மற்றும் அரவிந்த் ஆகியோர் காய்கறி கடை நடத்தி வருகின்றனர். அடிக்கடி இவர்களுக்குள் இடப் பிரச்சினை ஏற்பட்டு தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் நேற்று மாலை 5 மணி அளவில் கோபி காய்கறி வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது அவரது மனைவியும் உடன் இருந்தார். அப்போது அங்கு ஆட்டோவில் வந்த அரவிந், ஆனந்த் மற்றும் மூன்று பேர் கோபியை சரமாரியாக வெட்டினர். இதில் கோபி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். தடுக்க வந்த அவரது மனைவி லதா கையில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டது.

உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த கொடுங்கையூர் போலீசார் கோபி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். லதாவை சிகிச்சைக்காக அதே மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

இட பிரச்சினையில் இந்த கொலை நடந்ததா அல்லது வேறு ஏதாவது பிரச்சினை உள்ளதா என்ற கோணத்தில் கொடுங்கையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். மார்க்கெட் பகுதியில் நடைபெற்ற இந்த கொலை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது