இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டவர் கைது: வாகனம் பறிமுதல்
வாகன திருட்டில் ஈடுபட்ட சரத்குமார்.
சென்னை வியாசர்பாடி 15வது கிழக்கு குறுக்குதெரு பகுதியைச் சேர்ந்தவர் இமாம் வயது 42 இவர் நுங்கம்பாக்கத்தில் டைலராக பணிபுரிந்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் பணி முடித்து இரவு 10 மணிக்கு அவரது இரு சக்கர வாகனத்தை வீட்டின் முன்பு நிறுத்தி வைத்துவிட்டு வீட்டிற்கு சென்றார். அதன்பின்பு அதிகாலை எழுந்து பார்த்தபோது வாகனம் காணாமல் போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து எம்கேபி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
நேற்று அதிகாலை எம்கேபி நகர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது, காணாமல் போன இருசக்கர வாகனத்தை வேறு ஒரு நபர் ஓட்டி வருவதை பார்த்தனர்.
இதையடுத்து அந்த நபரை பிடித்து விசாரணை செய்ததில், வியாசர்பாடி தாமோதரன் தெரு பகுதியைச் சேர்ந்த சரத்குமார் என்கின்ற கோழி சரத் வயது 23 என்பதும், இவர் மீது ஏற்கனவே எம்கேபி நகர் காவல் நிலையத்தில் குற்ற வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது.
மேலும் இமாமின் இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றதும் போலீசாருக்கு தெரியவந்தது. இதனையடுத்து இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார் சரத்குமாரை கைது செய்து அவர் மீது வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu