ரயிலில் கடத்த முயன்ற கஞ்சா பறிமுதல்: வட மாநிலத்தவர் 2 பேர் கைது

ரயிலில் கடத்த முயன்ற கஞ்சா பறிமுதல்: வட மாநிலத்தவர் 2 பேர் கைது
X

ரயிலில் கஞ்சா கடத்தியதாக கைது செய்யப்பட்ட வட மாநிலத்தை சேர்ந்த இருவர்.

சென்னை ரயிலில் கடத்த முயன்ற 3.5லட்சம் மதிப்புள்ள 16கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து இருவரை ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் கைது செய்துள்ளனர்.

ரயிலில் கஞ்சா கடத்தி செல்பவரை கைது செய்ய ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று பெரம்பூர் ரயில் நிலையம் அருகே ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்கிடமான முறையில் இரு நபர்கள் கையில் பையுடன் சென்றனர்.

இவர்களை ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் பிடித்து விசாரணை நடத்தியபோது ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ரோகித் டி கால்(36) மற்றும் சமந்தா பிரதான் 34 ஆகிய இருவர் என தெரியவந்தது. இவர்கள் கையில் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது காய்ந்த கஞ்சா இருப்பது தெரியவந்தது.

இதனை அடுத்து இவர்கள் கையில் வைத்திருந்த 9.7 கிலோ கஞ்சா வை பறிமுதல் செய்து இவர்களை கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா ஒரு லட்சத்து 94 ஆயிரம் மதிப்புடையது என ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இதேபோல் எர்ணாகுளம் பகுதிக்கு செல்லக்கூடிய டாட்டா எக்ஸ்பிரஸ் ரயில் பெரம்பூர் பகுதியிலிருந்து கிளம்ப தயாராக இருந்துள்ளது. அப்போது பணியாளர் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது d2 கோச்சில் கேட்பாரற்று ஒரு பை இருந்துள்ளது.

இதுகுறித்து ரயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு அளித்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்து அந்த பையை திறந்து பார்க்கும்போது 7 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது இதன் மதிப்பு ஒரு லட்சத்து 42 ஆயிரம் என்பது தெரியவந்தது.

கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் இந்த கஞ்சாவை கடத்தி வந்தது யார் என ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது