வியாசர்பாடியில் இருசக்கர வாகனத்தில் கஞ்சா விற்பனை: 2 பேர் கைது

வியாசர்பாடியில் இருசக்கர வாகனத்தில் கஞ்சா விற்பனை: 2 பேர் கைது
X

கஞ்சா விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்ட இருவர்.

சென்னை வியாசர்பாடியில் இருசக்கர வாகனத்தில் கஞ்சா விற்பனை செய்ததாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை வியாசர்பாடி மற்றும் எம் கே பி நகர் உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் இரு சக்கர வாகனத்தில் வரும் மர்ம நபர்கள் சம்பந்தப்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக எம்கேபி நகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் எம்கேபி நகர் போலீசார் நேற்று அதிகாலை வியாசர்பாடி முல்லை காம்ப்ளக்ஸ் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை மடக்கி பிடிக்க முயற்சி செய்தனர். அவர்கள் வண்டியை நிறுத்தாமல் அதி வேகமாக சென்றுவிட்டனர்.

அவர்களைத் துரத்திப் பிடித்த போலீசார், அவர்களது இருசக்கர வாகனத்தை சோதனை செய்தபோது அதில் இரண்டு 2 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து அவர்களை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்ததில், பிடிபட்ட நபர்கள் வியாசர்பாடி 19வது பிளாக் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீதர் வயது 22 மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த விஜயன் வயது 31 என்பது தெரியவந்தது.

இவர்கள் வெளிப் பகுதிகளில் இருந்து கஞ்சாவை வாங்கி அதை இரவு நேரங்களில் இரு சக்கர வாகனத்தில் வைத்து வியாசர்பாடி எம்கேபி நகர் உள்ளிட்ட பகுதிகளில் விற்பனை செய்து வந்தது.

இதையடுத்து 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்த எம்கேபி நகர் போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story