கொடுங்கையூரில் இரவு நேரத்தில் கஞ்சா விற்பனை செய்த 2 பேர் கைது

கொடுங்கையூரில் இரவு நேரத்தில் கஞ்சா விற்பனை செய்த 2 பேர் கைது
X

 கைது செய்யப்பட்ட அன்வர் பாஷா, அஜய்.

சென்னை கொடுங்கையூரில் இரவு நேரத்தில் கஞ்சா விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை கொடுங்கையூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு நேரங்களில் மர்மநபர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் நேற்று காலை கொடுங்கையூர் முத்தமிழ் நகர் 143 வது தெருவில் கொடுங்கையூர் போலீசார் திடீரென்று ஒரு வீட்டில் சோதனை செய்தனர். அப்போது அந்த வீட்டில் ஒன்றரை கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து அந்த வீட்டில் இருந்த அன்வர் பாஷா 50 என்ற நபரை போலீசார் கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின் பேரில் கொடுங்கையூர் ஆர்.ஆர்.நகர் பகுதியைச் சேர்ந்த அஜய் என்கின்ற மண்ணு மூட்டை என்ற நபரையும் கைது செய்தனர்.

இருவரும் இரவு நேரங்களில் கொடுங்கையூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதனையடுத்து இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த கொடுங்கையூர் போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
மல்லசமுத்திரம் மார்க்கெட்டில் பருத்திக்கு உச்ச விலை!..ரூ. 1.50 லட்சத்திற்கு ஏலம்!