சென்னை வியாசர்பாடியில் முப்படை தலைமை தளபதிக்கு அஞ்சலி

சென்னை வியாசர்பாடியில் முப்படை தலைமை தளபதிக்கு  அஞ்சலி
X

சென்னை வியாசர்பாடியில் ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்த தலைமை தளபதி உள்ளிட்ட ராணுவ வீரர்களுக்கு சுதந்திர போராட்ட தியாகிகள் சங்கத்தினர் அஞ்சலி செலுத்தினர்.

வியாசர்பாடியில் சுதந்திரப் போராட்ட தியாகிகள். ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் பலியான முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேரின் மறைவிற்க்கு தமிழகம் முழுவதும் அரசியல் கட்சியினர் பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் பல்வேறு அமைப்பைச் சேர்ந்தவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக சென்னை வியாசர்பாடி பகுதியில் முன்னாள் சுதந்திரப் போராட்ட தியாகிகள் சுமார் 20க்கும் மேற்பட்டோர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்று அவர்களது திருவுருவப் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

அகில இந்திய சுதந்திரப் போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களின் வழித்தோன்றல்கள் சங்கம் சார்பில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதன் மாநிலத்தலைவர் சுதந்திர போராட்ட தியாகி குருமூர்த்தி ஐயா தலைமையில் நடைபெற்ற இந்த அஞ்சலி நிகழ்ச்சியில் சுதந்திர போராட்டத்தின் போது பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்ட சுதந்திரப் போராட்ட தியாகிகள் இதில் கலந்துகொண்டனர்.

80 வயது முதல் 95 வயது வரை உள்ள வர்கள் இதில் கலந்து கொண்டு உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர் அப்போது அவர்களில் சிலர் கண்ணீர் விட்டு அழுத சம்பவம் அங்கிருந்தவர்களை கண் கலங்க வைத்தது.

மேலும் இந்த நிகழ்ச்சியில் அப்பகுதி பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியை சங்கத்தில் ஒருங்கிணைப்பாளர்கள் பிரித்திவிராஜ். ரமேஷ் குமார் உள்ளிட்டோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

Tags

Next Story
ai solutions for small business