பெரம்பூரில் வேரோடு சாய்ந்த 20 ஆண்டுகள் பழமை வாய்ந்த மரம்
பெரம்பூரில் வேரோடு சாய்ந்த பழமையான மரம்
சென்னையில் கடந்த 3 நாட்களாக விட்டுவிட்டு அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் இரண்டு அடிக்கு மேல் தண்ணீர் தேங்கி உள்ளது பல இடங்களில் மரத்தின் வேர்கள் வலுவிழந்து ஆங்காங்கே விழுந்துள்ளன அதனை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் தீயணைப்புத்துறை அதிகாரிகள் உடனடியாக வெட்டி அப்புறப்படுத்தி வருகின்றனர்
அந்த வகையில் பெரம்பூர் 70வது வார்டுக்கு உட்பட்ட பட்டேல் ரோடு பகுதியில் 20 ஆண்டுகள் பழமை வாய்ந்த தூங்கு மூஞ்சி மரம் இன்று காலை வேரோடு சாய்ந்தது. இதில் மரத்தின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்த்திகேயன் என்பவருக்கு சொந்தமான கார் பலத்த சேதமடைந்தது. மேலும் அருகிலிருந்த மின் கம்பம் கடுமையான சேதம் அடைந்தது.
இதுகுறித்து பொதுமக்கள் மாநகராட்சி அதிகாரிகளுக்கும் செம்பியம் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் அங்கு வந்த மாநகராட்சி 70 வது வார்டு உதவி பொறியாளர் பாபு மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் மரத்தினை அகற்றும் வேலையில் ஈடுபட்டனர். சுமார் இரண்டு மணி நேரம் போராடி மரம் முழுவதும் துண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு சாலையின் ஓரமாக போடப்பட்டன. அதிகாலை நேரம் என்பதால் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை
இதுகுறித்து செம்பியம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சம்பவ இடத்திற்கு வந்த மின்சார பணியாளர்கள் மின்கம்பத்தை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu