ஐந்து வருடங்களாக போலீசாருக்கு தண்ணி காட்டிய திருடன் கைது

ஐந்து வருடங்களாக போலீசாருக்கு தண்ணி காட்டிய திருடன் கைது
X
கடந்த 5 வருடங்களாக போலீசாருக்கு தண்ணி காட்டிய திருடன், வியாசர்பாடி குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

சென்னை காசிமேடு பவர் குப்பம் புதிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சரண்ராஜ், வயது 35, இவர் காசிமேடு பகுதியில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இவர் மீது, வியாசர்பாடி, எம்கேபி நகர், காசிமேடு உள்ளிட்ட காவல் நிலையங்களில் பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. அத்துடன், 2008ஆம் ஆண்டு இவர் மீது போடப்பட்ட பல வழக்குகளில், இவர் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தொடர்ந்து போலீசாருக்கு தண்ணி காட்டி வந்துள்ளார்.

இதனையடுத்து, சரண்ராஜை பிடிக்க, எம்கேபி நகர் உதவி கமிஷனர் தமிழ்வாணன் உத்தரவின்பேரில். வியாசர்பாடி குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பத்மாவதி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. நேற்று காலை, பதினோரு மணி அளவில் வியாசர்பாடி மேம்பாலம் அருகே, போலீசார் அவரை மடக்கி பிடித்தனர். காவல் நிலையம் அழைத்து சென்று இவரிடம் விசாரணை செய்ததில், பத்திற்கும் மேற்பட்ட வழக்குகளில், ஐந்து ஆண்டுகளாக இவர், நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, வியாசர்பாடி குற்றப்பிரிவு போலீசார், சரண்ராஜ் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்