சென்னை வியாசர்பாடியில் பெண்களை கேலி கிண்டல் செய்த 4 ரவுடிகள் கைது

சென்னை வியாசர்பாடியில் பெண்களை கேலி கிண்டல் செய்த 4 ரவுடிகளை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சென்னை வியாசர்பாடி பகுதியில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய 2 ரவுடிகள் தொடர்ந்து அப்பகுதி பெண்களுக்கு தொல்லை கொடுத்து வருவதாகவும் பெண்கள் வேலைக்குச் செல்லும் போது கேலி கிண்டல் செய்து வருவதாகவும் பாதிக்கப்பட்ட சிலபேர் வியாசர்பாடி போலீசாருக்கு தொலைபேசி வாயிலாக ரகசியமாக தகவல் தெரிவித்தனர்





தகவலின் பேரில் வியாசர்பாடி போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வியாசர்பாடி நேரு நகர் பகுதியைச் சேர்ந்த பாலாஜி (வயது 22 )அதே பகுதியை சேர்ந்த திவாகர்( 25 )ஆகிய 2 பேரையும் தேடி வந்தனர் . இவர்கள் இருவர் மீதும் வியாசர்பாடி எம்.கே.பி. நகர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. இதனையடுத்து நேற்று மதியம் வியாசர்பாடி குட்செட் அருகே பதுங்கியிருந்த பாலாஜி மற்றும் திவாகர் ஆகிய இருவரையும் வியாசர்பாடி போலீசார் கைது செய்தனர்

மேலும் இவர்களுடன் மது அருந்திக் கொண்டிருந்த வியாசர்பாடி பி .வி. காலனி பகுதியை சேர்ந்த தினகரன்( 39 )மற்றும் எம்.கே.பி. நகர் பகுதியை சேர்ந்த மற்றொரு பாலாஜி ( 29 )ஆகிய இருவரையும் கைது செய்தனர். இதில் தினகரன் மீது வியாசர்பாடி எம்.கே.பி. நகர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் பத்திற்கும் மேற்பட்ட வழக்குகளும். கைது செய்யப்பட்ட மற்றொரு பாலாஜி மீது மாதவரம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் இருப்பது தெரியவந்தது மேலும் இவர்களிடம் இருந்து இரண்டு கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன.

சமீபத்தில் வியாசர்பாடி மெல்பட்டி பொன்னப்பன் தெரு பகுதியைச் சேர்ந்த சபியுல்லா (வயது 31 )என்பவரை தாக்கி இவர்கள் 2000 ரூபாய் வழிப்பறி செய்ததும் தெரியவந்தது. இதனையடுத்து பாலாஜி, திவாகர், தினகரன், மற்றொரு பாலாஜி என 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த வியாசர்பாடி போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!