சென்னை பெரம்பூரில் மாநில அளவிலான கராத்தே போட்டி

சென்னை பெரம்பூரில் மாநில அளவிலான கராத்தே போட்டி
X

சென்னை பெரம்பூரில் மாநில அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது.

சென்னை பெரம்பூரில் மாநில அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது. இதில் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

சென்னை பெரம்பூர் மெல்பட்டி பொண்ணப்பன் தெருவில் தனியார் திருமண மண்டபத்தில் மாநில அளவிலான கராத்தே போட்டிகள் நடைபெற்றன. மபூனி கராத்தே பள்ளி சார்பில் நடத்தப்பட்ட இந்த கராத்தே போட்டியில் கட்டா. டீம் கட்டா. குமித்தே ஆகிய 3 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன இந்த போட்டியில் 7 வயதிலிருந்து 18 வயது வரை உள்ள ஆண் பெண் என இருபாலரும் கலந்து கொண்டனர்.

சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் செங்கல்பட்டு மதுரை திருச்சி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட கராத்தே வீரர் வீராங்கனைகள் இதில் கலந்துகொண்டன.

ர் இன்று காலை முதல் மாலை வரை தொடர்ச்சியாக போட்டிகள் நடத்தப்படட்டன. ஒவ்வொரு பிரிவிலும் அதிக புள்ளிகள் பெற்று வெற்றி பெற்ற மாணவ மாணவியர் ஜனவரி மாதம் கேரளாவில் நடைபெற உள்ள தேசிய அளவிலான கராத்தே போட்டிக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.

இன்றைய காலகட்டத்தில் பள்ளி மாணவ மாணவிகளிடையே தற்காப்புக் கலையின் அவசியத்தை உணர்த்துவதற்காகவே இது போன்ற போட்டிகளை நடத்துவதாகவும். இளம் மாணவ மாணவியர் இந்த தற்காப்பு கலையை பயின்று தங்கள் திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் என நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்..

Tags

Next Story
உங்கள் வணிக அறிவை மெருகேற்றும் புதிய ஆயுதம் – AI Course -  இதோ உங்களுக்காக!