பள்ளி மாணவ, மாணவியருக்கு பாலியல் மற்றும் போக்சோ சட்டம் விழிப்புணர்வு நிகழ்ச்சி

பள்ளி மாணவ, மாணவியருக்கு பாலியல் மற்றும் போக்சோ சட்டம்  விழிப்புணர்வு நிகழ்ச்சி
X

கொடுங்கையூர் காமராஜர் சாலையில் உள்ள சென்னை அரசு உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியருக்கு பாலியல் மற்றும் போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. 

பள்ளி மாணவ, மாணவியருக்கு பாலியல் மற்றும் போக்சோ சட்டம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது

சென்னையில் குழந்தைகளுக்கு எதிராக நடத்தப்படும் பாலியல் குற்றங்கள் குறித்து மாணவ மாணவியருக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.பொது இடத்தில் மாணவ மாணவியர் எவ்வாறு தங்களை பாதுகாத்துக் கொள்வது. பாலியல் தொடர்பான சம்பவங்களில் இருந்து எவ்வாறு தங்களை பாதுகாத்துக் கொள்வது என்பது குறித்து காவல்துறை மற்றும் சமூக ஆர்வலர்களால் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது

அந்த வகையில் சென்னை புளியந்தோப்பு காவல் மாவட்டத்திற்குட்பட்ட கொடுங்கையூர் காமராஜர் சாலையில் உள்ள சென்னை அரசு உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியருக்கு கொடுங்கையூர் இன்ஸ்பெக்டர் ஜவகர் உத்தரவின்பரில் பாலியல் குற்றங்கள் மற்றும் போக்சோ சட்டம் பற்றிய விழிப்புணர்வு வகுப்பு நேற்று எடுக்கப்பட்டது

கொடுங்கையூர் சப் இன்ஸ்பெக்டர் ஷஜிபா மற்றும் ராமமூர்த்தி தலைமையிலான போலீசார் நேற்று பள்ளிக்கு சென்று பள்ளி மாணவ மாணவியருக்கு விழிப்புணர்வு வகுப்பு எடுத்தனர். அப்போது மாணவிகளிடையே உரையாற்றிய சப்-இன்ஸ்பெக்டர் சஜிபா மாணவ மாணவியர் எங்கே வெளியே சென்றாலும் பெற்றோர்களிடம் கூறி விட்டு செல்ல வேண்டும்.

மேலும் நம்முடன் பழகும் நபர்களில் யாருடைய செயல்களிலாவது அல்லது அவர்கள் பழகும் விதத்திலோ ஏதாவது மாற்றங்கள் தெரிந்தால் உடனடியாக அதுகுறித்து பெற்றோரிடமோ அல்லது ஆசிரியரிடமோ தெரிவிக்க வேண்டும். மேலும் பாலியல் ரீதியாக தவறான கண்ணோட்டத்தில் உங்களை யாரேனும் அணுகினால் நீங்கள் காவல் நிலையத்தில் தொடர்பு கொள்ளலாம்.

இதற்காக நீங்கள் காவல் நிலையம் வர வேண்டிய அவசியம் கிடையாது 1098 என்ற நம்பருக்கு நீங்கள் தகவல் தெரிவித்தால் போலீசார் உங்களை தொடர்பு கொண்டு உங்களுக்கு தேவையான உதவிகளை செய்வார்கள் எந்த விதத்திலும் உங்களுடைய தகவல்கள் வெளியிடப்பட மாட்டாது .

மேலும் தற்போது உள்ள போக்சோ சட்டம் குறித்தும் அந்தச் சட்டம் குழந்தைகளுக்கு எந்த வகையில் பயனுள்ளதாக உள்ளது என்பது குறித்தும் மாணவ மாணவியருக்கு தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!