அதிமுக தொண்டர்கள் குறித்து சசிகலா அறிக்கை : முன்னாள் அமைச்சர் காட்டமான பதில்
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பரபரப்பு பேட்டி ( பைல் படம்)
அதிமுக தொண்டர்களுக்காக சசிகலா அறிக்கை விடுவது முதலை நீலிக்கண்ணீர் வடிப்பதற்கு சமமாகும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் காட்டமான பதில் அளித்தார்.
ஜெயலலிதாவின் ஐந்தாவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருவிக நகர் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் அதிமுக சார்பில் இன்று அன்னதான நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
பெரம்பூர் பாரதி சாலையில் அதிமுகவினர் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில்
ஜெயலலிதா அவர்களின் நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்துவதற்காக ஏற்கனவே முறையாக அனுமதி பெற்று தான் நாங்கள் அஞ்சலி செலுத்த சென்றிருந்தோம்
நாங்கள் நிகழ்ச்சி முடித்து வெளியே வரும் பொழுது அமமுக தொண்டர்களை உள்ளே அனுமதித்தார்கள் நாங்கள் முழுமையாக வெளியே வருவதற்கு முன்பே காவல்துறையினர் அவர்களை உள்ளே அனுமதித்து விட்டார்கள் கலவரம் வரவேண்டும் என்பதற்காகவே சிலர் இப்படி செய்கின்றனர் இதற்கு காவல் துறையினர் துணை போய் இருப்பது வேதனையாக உள்ளது. பதிலுக்கு நாங்களும் சட்டத்தை கையில் எடுத்தால் நிலைமை மோசமாகி இருக்கும் நாங்கள் சட்டத்தை மதிப்பதால் அமைதியாக இருந்து விட்டோம்.
ஜெயலலிதா நினைவிடத்தில் தொண்டர் படையுடன் சசிகலா வரவில்லை குண்டர்கள் படையுடன் வந்தார். அமமுக என்ற கட்சி அம்மா கட்டிக்காத்த அதிமுகவுக்கு எதிரான கட்சி தற்போது அமமுக தொண்டர்களையும் சசிகலாவையும் பிரிக்க முடியாது. இனியும் அவர்கள் அதிமுகவை காப்பாற்றப் போகிறேன் என கூறினால் அதைக்கண்டு தொண்டர்கள் ஏமாற மாட்டார்கள்.
கட்சிக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் அடிப்படை உறுப்பினர் இல்லாதவர்கள் வேண்டுமென்றே தலைமைக் கழகத்திற்கு வந்து ஒரு சலசலப்பை உண்டுபண்ண வேண்டும் என்ற நோக்கத்தோடு தலைமைக் கழகத்திற்கு வந்தார்கள்.
தகுதி உள்ளவர்களை நாங்கள் மனுத் தாக்கல் செய்ய அனுமதி அளித்தோம் ஆனால் தகுதி இல்லாதவர்கள் தொண்டர்கள் என்ற போர்வையில் வெளியே நின்றுகொண்டு தகராறில் ஈடுபட்டன. அவர்களுக்காக சசிகலா அறிக்கை விடுவது கொம்பு சீவி விட்டு அதற்காக முதலைக்கண்ணீர் வடிப்பதற்க்கு சமம் என தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu