கொடுங்கையூரில் ரூ.7 லட்சம் சீட்டு பணம் மோசடி: 3 பெண்கள் உட்பட 4 பேர் மீது வழக்கு
பைல் படம்.
சென்னை திருவொற்றியூர் சுங்கச்சாவடி பகுதியைச் சேர்ந்தவர் சொப்னா என்கின்ற ஸ்டெல்லா, 37. இவர் பாரிமுனை தம்புச்செட்டி தெருவில் உள்ள ஆன்லைன் கம்ப்யூட்டர் சென்டரில் டைப்பிஸ்ட்டாக வேலை செய்து வருகிறார்.
இவர் கொடுங்கையூர் டீச்சர்ஸ் காலனி பகுதியில் வசிக்கும் அவருக்கு ஏற்கனவே அறிமுகமான கலைச்செல்வி மற்றும் மூன்று பேரிடம் கடந்த 2019 ஆம் வருடம் மாத சீட்டு போட்டு உள்ளார். அதன் பிறகு 2021ஆம் ஆண்டு பத்தாம் மாதம் சீட்டுகள் முடிவடைந்த நிலையில் சீட்டு நடத்தியவர்கள் சொப்னாவிற்கு ஏழு லட்சம் ரூபாய் வரை பணம் தர வேண்டி இருந்துள்ளது.
இதுகுறித்து பலமுறை கேட்டும் பணம் தராமல் இருந்து வந்துள்ளனர். இதனால் சொப்னா குற்றவியல் நீதிமன்றத்தில் இதுகுறித்து முறையீட்டார். மனுவை விசாரணை செய்த நீதிமன்றம் சீட்டு பண மோசடியில் ஈடுபட்ட நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யுமாறு கொடுங்கையூர் போலீசாருக்கு அறிவுறுத்தியது அதனடிப்படையில் குற்றப்பிரிவு போலீசார் நேற்று சீட்டு பணம் மோசடியில் ஈடுபட்ட கலைச்செல்வி. கவிதா சிவசங்கர் மணி. கலா உள்ளிட்ட 4 பேர் மீது மோசடி வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu