ரயில்வே தொழிற் சங்கக் கூட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக தீர்மானம்

ரயில்வே தொழிற் சங்கக் கூட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக தீர்மானம்
X

சென்னை பெரம்பூர் மத்திய சங்க ஒற்றுமை நிலையத்தில் எஸ் ஆர் இ எஸ் ரயில்வே தொழிற்சங்கத்தின்  கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது

ரயில்வே நிர்வாகத்தை தனியார் மயமாக்க கூடாது ரயில்வே இடங்களை தனியாருக்கு விற்கக்கூடாது

ரயில்வே தொழிற்சங்க கலந்தாய்வுக் கூட்டத்தில் ஒன்றிய அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

சென்னை பெரம்பூர் மத்திய சங்க ஒற்றுமை நிலையத்தில் எஸ் ஆர் இ எஸ் ரயில்வே தொழிற்சங்கத்தின் நிகழாண்டுக்கான முதல் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு நிர்வாகத் தலைவர் எம் சூரியபிரகாஷ் தலைமை வகித்தார்.

இதில், ரயில்வே நிர்வாகத்தை தனியார் மயமாக்க கூடாது ரயில்வே இடங்களை தனியாருக்கு விற்கக்கூடாது .பிடித்தம் செய்யப்பட்ட டி ஏ. டி ஆர் தொகையினை திரும்ப வழங்க வேண்டும். காலி இடங்களில் பயிற்சி முடித்த தற்காலிக பணியாளர்களுக்கு வேலை வழங்க வேண்டும். தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். கொரோனா காலத்திலும் வேலை செய்யும் ரயில்வே ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும். ரயில்வே தொழிலாளர்களின் உரிமைகளை பறிப்பதை கைவிட வேண்டும் .தொடர்ந்து ரயில்வே தொழிலாளர்களுக்கு எதிராக செயல்பட்டு வரும் ஒன்றிய அரசுக்கு கண்டனம் தெரிவிப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில் பொதுச்செயலாளர் பி.எஸ். சூரிய பிரகாசம், மத்திய கோட்ட நிர்வாகிகள் பாபு. சந்திரசேகரன். முரளி உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Tags

Next Story