வியாசர்பாடியில் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில் குளம் சீரமைப்பு

சென்னை வியாசர்பாடி கோயில் குளம் சுத்தம் படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்ற போது எடுத்தப்படம்.
சென்னை வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரி சாலையில் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு இரவீஸ்வரர் திருக்கோயில் ஆலயம் உள்ளது. வியாசர்பாடி எம்கேபி நகர் கொடுங்கையூர் பெரம்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் இங்கு வருகை தந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம் இந்த கோவிலில் எதிர்தசையில் சூரிய தீர்த்த திருக்குளம் உள்ளது.
இந்த குளத்தை சுற்றி அப்பகுதியை சேர்ந்த மக்கள் ஈமச் சடங்குகள் செய்து நவதானியங்களை குளத்தில் வீசி செல்வதால் அடிக்கடி கோவில் குளத்தில் உள்ள நீர் பச்சை நிறமாக மாறி குளத்திலிருந்து துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் தொடர்ந்து புகார் அளித்தனர்.
மேலும் தற்போது பெய்த கனமழையின் காரணமாக குளம் மேலும் அசுத்தமானது இதனையடுத்து கோயில் ஆலய மேலாளர் தனசேகர் திருக் கோயில் செயல் அலுவலர் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் கோவில் குளத்தை சீர் அமைக்கும்படி பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர் டி சேகருக்கு தகவல் தெரிவித்தனர்ங
அதன்பேரில் நேற்று மாநகராட்சியில் அதிநவீன இயந்திரத்தைக் கொண்டு மாநகராட்சி ஊழியர்கள் கோவில் குளத்தை சீரமைக்கும் பணியை தொடங்கினர். கோவில் குளத்தில் இருந்த நவதானியங்கள் வலைகள் மூலம் அகற்றப்பட்டு தண்ணீரை சுத்தப்படுத்தும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்றது.
இதன் மூலம் கோவிலுக்கு வரும் பக்தர்கள கோவில் குளத்தை மீண்டும் பயன்படுத்தும் வகையில் சரி செய்யப்பட்டது. கோவில் குளத்தை சுற்றி ஈமச்சடங்குகள் செய்வதால் அடிக்கடி குளம் மாசு அடைவதால் ஈமச் சடங்குகள் செய்ய தனியாக ஒரு இடம் விரைவில் அமைக்கப்படும் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu