சட்டக்கல்லூரி மாணவன் தாக்கப்பட்ட விவகாரத்தில் காவலர்களிடம் கோட்டாட்சியர் விசாரணை

சட்டக்கல்லூரி மாணவன் தாக்கப்பட்ட விவகாரத்தில் காவலர்களிடம் கோட்டாட்சியர் விசாரணை
X

 கோட்டாட்சியரிடம்  நேரில் ஆஜராகி விளக்கம் அளித்த கொடுங்கையூர் போலீசார்.

சட்டக்கல்லூரி மாணவன் தாக்கப்பட்ட விவகாரத்தில் காவலர்களிடம் கோட்டாட்சியர் விசாரணை நடத்தினார்.

சென்னை கொடுங்கையூர் பகுதியில் கடந்த 13ஆம் தேதி சட்டக்கல்லூரி மாணவன் அப்துல் ரஹீம் என்ற நபர் முகக் கவசம் அணியவில்லை என்று கூறி கொடுங்கையூர் போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து காவல் நிலையத்தில் வைத்து அடித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அப்துல் ரஹீம் தன்னை தாக்கிய காவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை மாநகர கமிஷனரிடம் புகார் மனு அளித்திருந்தார்.

அதனடிப்படையில இரண்டு காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு மற்றவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என கமிஷனர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் கொடுங்கையூர் காவலர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தி சட்டக்கல்லூரி மாணவர்கள் மற்றும வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து கொடுங்கையூரில் சம்பவத்தன்று இரவு பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் நசீமா காவலர்கள் உத்திரகுமார், ஹேமநாதன், சத்யராஜ், ராமலிங்கம், அந்தோணி, தலைமைக் காவலர் பூமிநாதன் உட்பட 9 காவலர்கள் மீது கொடுங்கையூர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

மேலும் இந்த வழக்கை மாவட்ட கோட்டாட்சியர் விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்யும்படி சென்னை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார். அதனடப்படையில் இரண்டு தினங்களுக்கு முன்பு ஸ்டான்லி மருத்துவமனையில் சட்டக்கல்லூரி மாணவன் அப்துல் ரஹீமிடம் மாவட்ட கோட்டாட்சியர் கண்ணப்பன் விசாரணை நடத்தினார்.

அதனைத் தொடர்ந்து இன்று இன்ஸ்பெக்டர் நசீமா உட்பட ஒன்பது காவலர்களும் மாவட்ட கோட்டாட்சியரிடம் தண்டையார்பேட்டை தாசில்தார் அலுவலகத்தில் நேரில் ஆஜராகி சம்பவம் தொடர்பாக விளக்கம் அளித்தனர். தொடர்ந்து மேலும் சிலரிடம் விசாரணை நடத்தவும் அப்துல்ரஹீம் மற்றும் அவரது நண்பர்களிடம் விசாரணை நடத்தபட உள்ளதாகவும், மாவட்ட கோட்டாட்சியர் தரப்பில் கூறப்படுகிறது.

Tags

Next Story
பெரியாரிஸ்டுகள் என்னிடம் மண்டியிட்டு பொதுமன்னிப்பு கேட்க வேண்டும்- இடைவிடாமல் தாக்கும் சீமான்..!