பிரதமர் மோடி ஹிட்லர் போன்று செயல்பட்டு வருகிறார்: கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

பிரதமர் மோடி ஹிட்லர் போன்று செயல்பட்டு வருகிறார்: கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு
X

சென்னை வியாசர்பாடியில் பிரசாரத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி.

தமிழக அரசுக்கு எதிராக எந்த நடவடிக்கையை ஆளுநர் எடுத்தாலும் காங்கிரஸ் கட்சி, பொதுவுடைமைக் கட்சிகள் கடுமையாக எதிர்ப்போம்.

பிரதமர் மோடி தன்னை சர்வாதிகாரியாக நினைத்து ஆட்சி செய்து வருகிறா என்றார் தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே எஸ் அழகிரி.

சென்னை பெரம்பூர் தொகுதிக்கு உட்பட்ட 37 வது வார்டு போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் டில்லிபாபு அவர்களை ஆதரித்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே எஸ் அழகிரி, வியாசர்பாடி பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில்,

மேற்கு வங்கத்தில் சட்டமன்றத்தை ஆளுநர் முடக்கி வைத்ததன் மூலம் மோடி தன்னை ஹிட்லராக பாவித்து ஹிட்லரைப் போல செயல்படலாம் என நினைக்கிறார். ஆனால் ஹிட்லர் போல மாறுவது சிரமம். இது ஒரு ஜனநாயக நாடு. மேற்கு வங்கத்தில் நடைபெற்றிருப்பதை இந்திய மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். எப்போதுமே ஜனநாயகத்திற்கு புறம்பான நிகழ்வுகள் எல்லாம் தோற்கடிக்கப்பட்டுளளன. தமிழக அரசுக்கு எதிராக எந்த ஒரு நடவடிக்கையை இந்த ஆளுநர் எடுத்தாலும் இந்தியா முழுவதும் உள்ள காங்கிரஸ் கட்சி, பொதுவுடைமைக் கட்சிகள் கடுமையாக எதிர்ப்போம்.

மேற்கு வங்கத்தில் பாஜக செய்திருப்பது ஒரு சோதனை. அந்த சோதனையில் அவர்கள்தமிழக அரசுக்கு எதிராக எந்த ஒரு நடவடிக்கையை இந்த ஆளுநர் எடுத்தாலும் இந்தியா முழுவதும் உள்ள காங்கிரஸ் கட்சி, பொதுவுடைமைக் கட்சிகள் கடுமையாக எதிர்ப்போம்.தோல்வி அடைவார்கள். சட்டமன்றத்தை முடக்கி வைக்கலாம். ஆனால் அது மாநில அரசின் ஒப்புதலோடு செய்ய வேண்டும். ஆனால் மேற்கு வங்கத்தில் அவர்கள் தவறு செய்துள்ளார்கள். அவர்கள் செய்த தவறுக்கு அவர்களது விரலை வைத்து அவர்களது கண்ணை குத்தி கொள்வார்கள் .அதிமுக மிகவும் சோர்ந்து போய்விட்டது .களத்தில் அவர்கள் பணியாற்றவில்லை. அவர்கள் இந்த தேர்தலில் வெற்றி பெற முடியாது அவர்கள் தேர்தல் களத்தில் மௌனமாக உள்ளார்கள். அவர்கள் பணியாற்றவில்லை அவர்களுக்கு ஒரு உற்சாகத்தை ஏற்படுத்துவதற்காக 2024 ல் சட்டமன்றத்திற்கு தேர்தல் வரப்போகிறது என ஓபிஎஸ் கூறி வருகிறார்

இவையெல்லாம் கேலிக்கூத்தான ஒரு விஷயம் தமிழகம் போன்ற ஒரு மாநிலத்தில் அவ்வாறெல்லாம் செய்துவிட முடியாது. பாரதிய ஜனதா 13 மாநிலங்களில் தான் ஆட்சி செய்கிறது. அங்கு வேண்டும் என்றால் இவர்கள் அப்படி செய்து கொள்ளலாம் மற்ற மாநிலங்களில் பாரதிய ஜனதா அல்லாத கட்சிகள் ஆட்சி செய்கிறது. இதை யாரும் அனுமதிக்கமாட்டார்கள். ஒரு சட்டமன்றத்தைக் கலைக்க வேண்டும் என்று சொன்னால் உச்ச நீதிமன்றத்தின் அனுமதி வேண்டும். நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு மெஜாரிட்டி வேண்டும். அத்தைக்கு மீசை முளைத்தால் அப்படி எல்லாம் நடக்கலாம். ஹஜாப் என்பது மோடி அரசாங்கம் வேண்டும் என்று செய்கின்ற ஒரு பிரசாரம் தேர்தல் வருகின்ற சமயங்களில் சிறுபான்மையினருக்கு எதிரான இதுபோன்ற விஷயங்களை அதிகப்படுத்தி கலவரம் விளைவித்து. அதன் மூலம் ஆட்சிக்கு வரலாம் என கொள்கை உடைய ஒரு இயக்கம் பாரதிய ஜனதா கட்சி. இந்த ஹிஜாப் விஷயம் இந்திய மக்களிடையே வெற்றி பெறாது .

ஒரு கருத்தை பரப்புரை செய்வதில் எந்த தவறும் இல்லை. அந்த கருத்தை மக்கள் ஏற்றுக்கொள்கிறார்களா என பார்க்க வேண்டும். ஆர்எஸ்எஸ் அமைப்பு தடை செய்யப்படாத வரை அது கருத்து சொல்வதை நாம் தடுக்க முடியாது. நாம் அந்தக் கருத்திற்கு எதிரான பரப்புரையை இன்னும் அதிகமாக செய்ய வேண்டும். அவர்களை விட நாம் பரப்புரையை அதிகமாக செய்ய வேண்டும் என்றார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி.

Tags

Next Story
ai in future agriculture