பெரம்பூரில் மாற்றுத்திறனாளிகளுடன் பொங்கல் விழா கொண்டாடிய திமுகவினர்

பெரம்பூரில் மாற்றுத்திறனாளிகளுடன் பொங்கல் விழா கொண்டாடிய திமுகவினர்
X

பெரம்பூரில், மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு  பொங்கல் பரிசு வழங்கிய திமுகவினர்.

பெரம்பூரில், மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆட்டோ ஓட்டுனர்களுடன் திமுகவினர் பொங்கல் பண்டிகையை கொண்டாடினர்.

தை பொங்கல் திருநாளை முன்னிட்டு சென்னை வடக்கு மாவட்டம் பெரம்பூர் தெற்கு பகுதி, 36 வது வட்ட திமுக சார்பில் மாற்றுத்திறனாளிகள் ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோருக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது. இதில் பொங்கல் வைக்க புதிய பாத்திரம் மற்றும் பொங்கல் வைக்க தேவையான பொருட்கள் கரும்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டன. மேலும் திமுக முன்னோடிகளுக்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டது.

பெரம்பூர் தொகுதி 36 வட்டம் சார்பில் வட்ட செயலாளர் க. பாபு ஏற்பாட்டில் சென்னை பாரதி நகர் மேற்கு கிராஸ் தெருவில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில், சென்னை வடக்கு மாவட்ட பொறுப்பளார் இளைய அருணா கலந்து கொண்டு 500க்கும் மேற்பட்டவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் ஆட்டோ ஓட்டுனர்கள் மாற்றுத் திறனாளிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டு பொங்கல் சிறப்பு தொகுப்பினை வாங்கிச் சென்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!