பெரம்பலூர் மக்கள் எந்த நேரத்திலும் என்னை தொடர்பு கொள்ளலாம், புதிய எஸ்பி மணி தகவல்

பெரம்பலூர் மக்கள் எந்த நேரத்திலும் என்னை தொடர்பு கொள்ளலாம், புதிய எஸ்பி மணி தகவல்
X

பெரம்பலூர் மாவட்ட போலீஸ் எஸ்பியாக மணி பொறுப்பேற்றுக் கொண்டார்.

பெரம்பலூர் மக்கள் தேவைக்காக என்னை எந்த நேரத்திலும் தொடர்பு கொள்ளலாம் என்று புதிதாக பதவியேற்ற போலீஸ் எஸ்.பி மணி தெரிவித்தார்.

சென்னை அமலாக்கத்துறை எஸ்பியாக பணியாற்றி வந்த எஸ்.மணி பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக மாற்றம் செய்யப்பட்டார். இதனைத்தொடர்ந்து அவர் இன்று காலை பெரம்பலூர் மாவட்டகாவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார்.

இதனைத்தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இதனையடுத்து அவர் தெரிவிக்கையில் மாவட்ட பொதுமக்கள், தங்கள் தேவைக்காவும், சேவைக்காவும் 24 மணி நேரமும் 6374111389 என்ற வாட்ஸ் ஆப் செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்,

மேலும் பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணறுகள், கள்ளச்சாராயம், கஞ்சா விற்பனை, லாட்டரி விற்பனை, ரவுடீசம் பற்றிய தகவல்கள், குற்றச்செயல்களை தடுக்கும் பொருட்டு குற்றவாளிகள் குறித்த தகவல்களை தெரிவிக்கலாம்.

நீங்கள் தெரிவிக்கும் தகவல்கள் முழுவதும் ரகசியமாக வைக்கப்படும். மாவட்டத்தில் குற்றச்சம்பவங்களை தடுக்கும் பொருட்டு சிசிடிவி கேமராக்கள் அதிக அளவில் வைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

அதற்கு ஸ்பான்சர் கொடுக்கும் அன்பர்கள் என்னை தொடர்பு கொள்ளலாம். மேலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் இணையதள மோசடிகள் குறித்து விசாரணை நடத்த மாவட்ட காவல்துறையில் சைபர் கிரைம் என்ற பிரிவு செயல்படுகிறது.

அதன் கூடுதல் காவல்கண்காணிப்பாளர் சுப்பிரமணியத்தை 9498143811 என்ற வாட்ஸ் ஆப் எண்ணில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்தார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்