கொடுங்கையூரில் நூதன முறையில் வீட்டில் திருடிய 3 பேர் கைது

கொடுங்கையூரில் நூதன முறையில் வீட்டில் திருடிய 3 பேர் கைது
X

பைல் படம்.

கொடுங்கையூரில் டிஷ் டிவி பழுது சரி செய்து தருவது போல் நடித்து நகை மற்றும் பணம் திருடியவர்களை போலீசார் கைது செய்தனர்.

கொடுங்கையூர் திருவள்ளூர் 13 வது குறுக்கு தெருவில் வசித்து வருபவர் சாந்தி வயது 57. இவரது கணவர் கிருஷ்ண மூர்த்தி, இறந்து விட்டார். சாந்தி தனியாக வசித்து வந்தார்.

இந்நிலையில் இவர்களது வீட்டில் உள்ள டிஷ் டிவி சில நாட்களாக பழுது அடைந்து இருந்தது. ஆகவே சாந்தி கேபிள் டிவி ஆப்ரேடரிடம் தகவல் தெரிவித்து இருந்தார் .

அதன் பேரில் டிஷ் டிவி பழுது நீக்க வந்த கொடுங்கையூர் முத்தமிழ் நகர் 4வது தெரு 1வது பிளாக்கை சேர்ந்த மோகன் வயது 46. சாந்தியை மொட்டை மாடிக்கு போய் டிஷ் ஆண்டனாவை திருப்பும் படி கூறியுள்ளார் . சாந்தி மாடிக்கு சென்றவுடன் வீட்டில் பீரோவில் இருந்த ரூபாய் 40 ஆயிரம் 4 சவரன் செயின் திருடிக் கொண்டு டிஷ் டிவி பழுது நீக்கி விட்டதாக கூறி சென்று விட்டுள்ளார்.

சாந்தி கிழே வந்து பார்த்த போது பீரோவில் இருந்த பணமும் நகையும் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந் தார். இதுகுறித்து கொடுங்கையூர் குற்றப் பிரிவு போலீசில் புகார் செய்தார்.

புகாரின்பேரில் குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் ராஜன் வழக்குப் பதிவு செய்து தேடி வந்த நிலை யில் நேற்று கேபிள் டிவி ஆபரேட்டர் மோகன். இவருக்கு உடந்தையாக இருந்த தண்டையார்பேட்டை இந்திரா நகரைச் சேர்ந்த மாரிமுத்து வயது 31, திரு வள்ளூர், லட்சுமி புரத்தைச் சேர்ந்த ராஜா வயது35 இவர்கள் மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர்

அவர்களிடமிருந்து 4 சவரன் செயின் 5 ஆயிரம் ரூபாய் பணம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்த போலீசார் 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
ai solutions for small business