ஏசி ரூமில் அமர்ந்து ஆர்டர் போடுபவர்அல்ல நம் முதல்வர்:அன்பில் மகேஷ் பொய்யாமொழி
பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி. சேகர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இந்து சமய அறநிலை துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
ஏசி ரூமில் அமர்ந்து ஆர்டர் போடும் முதல்வர் நம் முதல்வர் கிடையாது, மக்களோடு மக்களாக களத்தில் நிற்பவர்தான் நமது முதல்வர் என்றார் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி..
திமுக இளைஞரணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி திமுகவினர் இன்று கொண்டாடி வருகின்றனர். பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்குள்பட்ட எருக்கஞ்சேரி தனியார் பள்ளிகள் 2 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி. சேகர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இந்து சமய அறநிலை துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் ஏழை எளிய மக்களுக்கு தையல் இயந்திரம் மிதிவண்டி அரிசி மளிகை பொருட்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இதில், அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி மேலும் பேசியதாவது: மழை வெள்ளப் பாதிப்பு என்றவுடன் கோட்டையில் இருந்து கொண்டே ஆர்டர் போடும் முதல்வர் நமது முதல்வர் கிடையாது, பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டு அதற்கு தீர்வுகளை காணும் முதல்வரை நாம் பெற்றுள்ளோம்.
இந்தியாவிலேயே முன்னுதாரணமாக திகழும் முதல்வராக நம் முதல்வர் இருந்து வருகிறார். குறிப்பாக காவல் துறை முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் இருந்த காலம் மாறி, தற்போது தமிழக முதல்வர் காவல் நிலையங்களில் உதவி ஆய்வாளர் இருக்கையில் அமர்ந்து கோப்புகளை சரிபார்த்து, மக்கள் பிரச்னைகளை தீர்க்கும் விதத்தில் செயல்பட்டு வருகிறது. தான் போட்டியிட்டு வெற்றி பெற்ற திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் செல்லப்பிள்ளையாகவே உதயநிதி ஸ்டாலின் மாறிவிட்டார். ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று குறைகளை கேட்டு அந்த குறைகளை நிவர்த்தி செய்து வருகிறது .உதயநிதி ஸ்டாலின் நடந்து முடிந்த தேர்தலின் போது, தமிழகம் முழுவதும் அயராது பிரசாரம் செய்தார். அதை அருகில் இருந்து நாங்கள் பார்த்திருக்கிறோம். தமிழகமே உதயநிதி ஸ்டாலினை கொண்டாடும் என்றார் அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu