பெரம்பூரில் பீரோவில் இருந்த ஒன்பது சவரன் தங்க நகை மாயம்

பெரம்பூரில் பீரோவில் இருந்த ஒன்பது சவரன் தங்க நகை மாயம்
X
சென்னை பெரம்பூரில் பீரோவில் இருந்த ஒன்பது சவரன் தங்க நகை மாயமானது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை பெரம்பூர் நட்டால் தோட்டம் 1வது தெரு பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 47 ).இவர் பெரம்பூரில் உள்ள தனியார் ஓட்டலில் கணக்காளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி இவரது மனைவி தாட்சாயணி கர்ப்பமாக உள்ளார். பிரசவத்திற்காக அவர் தனது அப்பா வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் விஜயகுமார் மட்டும் வீட்டில் தனியாக இருந்து வருகிறார்.

கடந்த மாதம் 25ஆம் தேதி பீரோவில் 9 சவரன் தங்க நகைகளை வைத்து விட்டு அதன் பிறகு தொடர்ந்து வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 8ஆம் தேதி பீரோவைத் திறந்து பார்க்கும்போது 9 சவரன் தங்க நகைகள் காணாமல் போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து செம்பியம் குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளார். பீரோ கதவு உடைக்கப்படவில்லை வீட்டின் கதவு எதுவும் உடைக்கப்படவில்லை. இருந்தபோதிலும் திருட்டு போயுள்ளது என புகார் அளித்துள்ளார்.

இதனால் போலீசார் அந்த வீட்டில் இருப்பவர்களே யாரேனும் நகைகளை திருடி உள்ளனரா என்ற பல கோணங்களில் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!