ரவுடி மீது மர்ம நபர்கள் கொலை வெறி தாக்குதல்: போலீசார் விசாரணை

ரவுடி மீது  மர்ம நபர்கள் கொலை வெறி தாக்குதல்: போலீசார் விசாரணை
X
சம்பவத்தின்போது லிப்ட் கேட்டு வந்த அவரது வினோத்குமாரும், சுதர்சன் மீது தாக்குதல் நடத்தி உள்ளார்

பெரம்பலூர் வடக்கு மாதவி சாலையிலுள்ள, ஒடசகுளம், ராஷினி நகர் பகுதியில் வசித்து வருபவர் சுதர்ஷன (எ) சூரிகண்ணன் (40). இவர் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து வீட்டிற்கு செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது வடக்கு மாதவி சாலை பிரிவு ரோட்டில் பெரம்பலூரை சேர்ந்த வினோத் என்ற தெரிந்த நண்பர் (லிப்ட் கேட்டு) போகும் வழியில் இறங்கி கொள்வதாக இருசக்கர வாகனத்தில் ஏறிக்கொண்டார். வடக்கு மாதவி சாலையில் வரும் போது வண்டியை நிறுத்த சொல்லி வினோத் கேட்டுக் கொண்டுள்ளார். வாகனத்தை நிறுத்தியபோது அங்கே மறைந்திருந்த மர்ம கும்பல் கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுங்களால் சுதர்சன் (எ) சூரி கண்ணன் மீது திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் அவர் பலத்த காயங்களுடன் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இது சம்பவம் குறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார், சுதர்ஷன்(எ) சூரி கண்ணனிடம் விசாரணை மேற்கொண்டு தாக்குதல் நடத்திய மர்ம கும்பலை தேடி வருகின்றனர். மேலும் சம்பவத்தின்போது லிப்ட் கேட்டு வந்த வினோத்குமாரும், தாக்குதல் நடத்தி உள்ளார் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் தாக்குதலில் காயமடைந்த சுதர்சன் மீதும் பெரம்பலூர் காவல்நிலையத்தில் ஒன்பதுக்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது என்பது தெரியவருகிறது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!