இந்திய மாணவர்களை தாயகம் கொண்டு வருவதில் மோடி அரசுதோற்று விட்டது: முத்தரசன்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வடசென்னை மாவட்டம் சார்பில் வியாசர்பாடி நடந்த கண்டன ஆர்ப்பாட்டம்
இந்திய மாணவர்களை காக்க மோடி அரசு தவறிவிட்டது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலர் இரா. முத்தரசன் குற்றச்சாட்டினார்
உக்ரைன் நாட்டில் இந்திய மாணவர்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளதால் அவர்களை உடனடியாக மீட்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியும் பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வடசென்னை மாவட்டம் சார்பில் வியாசர்பாடி அம்பேத்கர் கலை கல்லூரி எதிரே இன்று காலை நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு வடசென்னை மாவட்ட செயலாளர் எம்.எஸ். மூர்த்தி தலைமை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கலந்து கொண்டு பேசுகையில், போர் மூளும் என்பதை ஏற்கெனவே பல நாட்டு பிரதமர்களும் அறிந்து வைத்திருந்தார்கள் அப்படி இருந்தும் இந்திய. மாணவர்களை அழைத்துவரும் விவகாரத்தில் ஒன்றிய அரசு தோற்றுவிட்டது . ஐநா சபை ரஷ்யா உக்ரைன் போரை தடுத்து நிறுத்தி பேச்சு வார்த்தையை துவங்க வேண்டும் என்றும் அமெரிக்காவின் நேட்டோவை கலைக்க வேண்டும். ஒன்றிய அரசு இந்திய மாணவர்களையும் தமிழக மாணவர்களையும் அழைத்து வர துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும் ரஷ்ய அரசு போரை நிறுத்தி பேச்சுவார்த்தைக்கு உட்பட வேண்டும் எனவும் முத்தரசன் குறிப்பிட்டார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் . மாநில துணைத்தலைவர் மு. வீரபாண்டியன், பெரம்பூர் தொகுதி செயலாளர் சுப்பிரமணி, மாநில துணை செயலாளர் வசந்த குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்..
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu