காங்கிரஸ் கட்சி வேட்பாளரின் பணிமனையை இந்து சமய அறநிலை துறை அமைச்சர் திறப்பு

காங்கிரஸ் கட்சி வேட்பாளரின் பணிமனையை இந்து சமய அறநிலை துறை அமைச்சர் திறப்பு
X

சென்னை மாநகராட்சியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளரின்  தேர்தல் பணிமனையை இந்து சமய அறநிலை துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு திறந்து வைத்தார்

சிறப்பு அழைப்பாளர்களாக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆர்.டி. சேகர். அசன் மௌலானா. துரை சந்திரசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்

சென்னை மாநகராட்சியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளரின் பணிமனையை இந்து சமய அறநிலை துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு திறந்து வைத்தார்.

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் பெரம்பூர் 37 -ஆவது வார்டில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக டில்லி பாபு போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து சென்னை வியாசர்பாடி எம்கேபி நகர் அரசு பேருந்து போக்குவரத்து பணிமனை எதிரே அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட தேர்தல் பணிமனையை இன்று காலை 9 மணி அளவில் தமிழ்நாடு இந்து அறநிலைய துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு திறந்து வைத்தார்.

அவருக்கு பூர்ணகும்ப மரியாதை அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வேட்பாளருக்கு வாக்குகள் கேட்டு பிரசாரத்தையும் தொடங்கி வைத்தார் . சிறப்பு அழைப்பாளர்களாக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆர்.டி. சேகர். அசன் மௌலானா. துரை சந்திரசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து வேட்பாளர் டில்லி பாபு வியாசர்பாடி எம்ஜிஆர் நகர் தாமோதிரன் நகர் ஆகிய பகுதிகளில் தெருத்தெருவாக சென்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்பொழுது அந்தப் பகுதியில் இருந்த டீக்கடை ஒன்றில் பொதுமக்களுக்கு டீ போட்டுக் கொடுத்து பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!