பெரம்பூரில் பணம் வராததால் ஏடிஎம் உடைத்த போதை ஆசாமி கைது

பெரம்பூரில் பணம் வராததால் ஏடிஎம் உடைத்த போதை ஆசாமி கைது
X
பெரம்பூரில் பணம் வராததால் ஏடிஎம் உடைத்த போதை ஆசாமி கைது செய்யப்பட்டார்.

சென்னை பெரம்பூர் ரமணா நகர் ஜவகர் ரோடு பகுதியில், ஏடிஎம் மையம் இயங்கி வருகிறது. நேற்றிரவு 7 மணி அளவில் ஏடிஎம் மிஷினை மர்மநபர் ஒருவர் அடித்து உடைப்பதாக, செம்பியம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு சென்ற செம்பியம் போலீசார், போதையில் இருந்த வடமாநில இளைஞரை கைது செய்தனர்.

அவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்ததில், பீகார் மாநிலத்தை சேர்ந்த சனோஜ் ராம் 28 என்பதும் இவர் ரமணா நகர் பகுதியில் குடிசை மாற்று வாரிய கட்டிடத்தில், மேஸ்திரியாக கடந்த ஒரு வருடமாக வேலை செய்து வருவதும் தெரியவந்தது.

ஏற்கனவே மது போதையில் இருந்த நபர், மேலும் மது அருந்துவதற்காக ஏடிஎம்-க்கு சென்று பணம் எடுத்தபோது, பணம் வராத காரணத்தினால் ஆத்திரத்தில், மிஷினை கல்லால் அடித்து உடைந்ததாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து செம்பியம் போலீசார், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!