சட்டக் கல்லூரி மாணவன் கைது விவகாரம்: 2 போலீசார் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம்

சட்டக் கல்லூரி மாணவன் கைது விவகாரம்: 2 போலீசார் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம்
X

பைல் படம்.

கொடுங்கையூரில் சட்டக்கல்லூரி மாணவன் கைது விவகாரத்தில் காவலர் இரண்டு பேர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம்.

சென்னை கொடுங்கையூர் எம்.ஆர் நகர் சந்திப்பு அருகே கடந்த வியாழனன்று அதிகாலை கொடுங்கையூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர் அப்போது வியாசர்பாடி புதுநகர் பகுதியைச் சேர்ந்த அப்துல்ரஹீம் 21 என்ற நபர் அவ்வழியாக சென்று கொண்டிருந்தார். முககவசம் அணியாமல் சென்றதால் போலீசார் அவரிடம் முககவசம் அணியும் படி அறிவுறுத்தினர். அப்பொழுது போலீசாருக்கும், அப்துல் ரஹீமுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு அப்துல் ரஹீம் அங்கு பணியில் இருந்த காவலர் உத்திரகுமாரை தாக்கியதாக கூறப்படுகிறது.

உத்தரகுமார் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த கொடுங்கையூர் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அப்துல்ரஹீமை கைது செய்த போலீசார் அவரை கடுமையாக தாக்கியதாகவும், இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் அப்துல் ரஹீம் தரப்பில் சென்னை மாநகர கமிஷ்னருக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிட்ட சென்னை மாநகர கமிஷனர் அதுவரை கொடுங்கையூர் காவலர் உத்தரகுமார் மற்றும் ஏட்டு பூமிநாதன் ஆகிய இருவரையும் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம் செய்து இன்று உத்தரவிட்டார். தொடர்ந்து போலீஸ் உயர் அதிகாரிகள் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil