பணம் தவறவிட்ட இளைஞரிடம் ஒரு மணி நேரத்தில் மீட்டுக் கொடுத்த கொடுங்கையூர் போலீசார்

பணம் தவறவிட்ட இளைஞரிடம் ஒரு மணி நேரத்தில் மீட்டுக் கொடுத்த கொடுங்கையூர் போலீசார்
X

பைல் படம்.

பெரம்பூரில் பணத்தை தவறவிட்ட இளைஞரிடம் ஒரு மணி நேரத்தில் கொடுங்கையூர் போலீசார் மீட்டுக் கொடுத்தனர்.

சென்னை கொடுங்கையூர் காவேரி சாலை 5வது குறுக்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் முகமது பைரஸ் 25. இவர் புளியந்தோப்பு ஆடு தொட்டயில் கேசியராக பணிபுரிந்து வருகிறார். இன்று காலை 5 மணி அளவில் தனது இருசக்கர வாகனத்தில் கால்வைக்கும் பகுதியில் 5 லட்ச ரூபாய் பணத்தையும் தனது செல்போனையும் ஒரு பையில் போட்டு வைத்துக்கொண்டு புளியந்தோப்பு சென்று கொண்டிருந்தார். அப்போது எம்கேபி நகர் அருகே வரும்போது கீழே குனிந்து பார்த்தபோது பணப்பை காணாமல் போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

தான் வந்த வழியே சென்று தேடிப்பார்த்தும் கிடைக்காததால், இதுகுறித்து கொடுங்கையூர் குற்றப்பிரிவில் புகார் அளித்தார். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த கொடுங்கையூர் போலீசார் உடனடியாக முகமது பைரசின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டபோது மொபைல் போன் சுவிட்ச் ஆப் ஆகியிருந்தது.

இதனையடுத்து செல்போன் எண்ணின் நெட்வொர்க் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஒரு மணி நேரத்திற்குள் அந்த செல்போனை திருவேற்காடு பகுதியில் மீட்டனர். மேலும் திருவேற்காடு கிரீன்பார்க் பகுதியைச் சேர்ந்த குமார் வயது 52 என்ற நபரை போலீசார் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர்.

விசாரணையில் கீழே இருந்த பணத்தை தான் நான் எடுத்துச் சென்றதாகவும் நான் திருடன் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இருந்தபோதிலும் கீழே கிடந்த பணத்தை போலீசாரிடம் கொடுக்காமல் செல்போனை ஸ்விட்ச் ஆஃப் செய்தது. ஏன் என தொடர்ந்து அந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story