கொடுங்கையூர் பகுதியில் கணவன் கண் எதிரே மனைவி சாலை விபத்தில் பலி

கொடுங்கையூர்  பகுதியில் கணவன் கண் எதிரே மனைவி சாலை விபத்தில் பலி
X

சாலை விபத்தை ஏற்படுத்திய கார்ப்பரேசன் குப்பை லாரி

கொடுங்கையூர் பகுதியில் கணவன் கண் முன்னே மனைவி சாலை விபத்தில் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

சென்னை ரெட்டில்ஸ் காரனோடை பகுதியை சேர்ந்தவர் பிரேம்குமார் வயது 45 இவரது மனைவி பரிமளா வயது 40 இவர்களுக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். இவர்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் இன்று அவர்களது வீட்டில் இருந்து புறப்பட்டு மூலக்கடை வழியாக அம்பேத்கர் கல்லூரி சாலை நோக்கி சென்றுகொண்டிருந்தனர்.

அப்பொழுது எருக்கஞ்சேரி ஐயப்பா திரையரங்கம் எதிரே சாலையில் சென்று கொண்டிருக்கும் போது பக்கவாட்டில் வந்த மாநகராட்சி குப்பை லாரி மோதியதில் இருவரும் நிலைகுலைந்து தடுமாறி சாலையில் விழுந்தனர்

அப்போது பிரமிளாவின் மீது லாரியின் முன்பக்க சக்கரம் ஏறி இறங்கியது இதில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து அவர் உயிரிழந்தார். அவரது கணவர் பிரேம்குமார் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். உடனடியாக அருகிலிருந்த பொதுமக்கள் ஒன்றுகூடி சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த கொடுங்கையூர் போலீசார் 108 ஆம்புலன்ஸ் மூலம் பிரேம்குமாரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

பிரமிளாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது அப்பகுதியில் ஒன்று கூடிய பொதுமக்கள் குப்பை லாரியை அடித்து உடைத்தனர் மேலும் அந்த லாரியை ஓட்டி வந்த ஒப்பந்த ஊழியரான உத்தரபிரதேச மாநிலம் பகுதியைச் சேர்ந்த மங்கள் என்பவரையும் அடித்து உதைத்தனர்

போலீசார் அவரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக கீழ்ப்பாக்கம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
ai solutions for small business