சென்னை வியாசர்பாடியில் மனைவியை கத்தரிக்கோலால் குத்திய கணவர் கைது

சென்னை வியாசர்பாடியில் மனைவியை கத்தரிக்கோலால் குத்திய கணவர் கைது
X

கைது செய்யப்பட்ட பிரபாகரன்.

சென்னை வியாசர்பாடியில் மனைவியை கத்தரிக்கோலால் குத்திய கணவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சென்னை வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர் 49வது பிளாக் பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 50 ). இவர் பந்தல் போடும் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி இந்திராணி( 45 ).இவர்களுக்கு திருமணமாகி 25 வருடங்கள் ஆகிறது.இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர்.

இந்நிலையில் பிரபாகரன் அடிக்கடி குடித்து விட்டு தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை அடிப்பது வழக்கம் என கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர் 49வது பிளாக் பகுதியில் இந்திராணி நடத்திவரும் சிறிய அளவிலான தையல் கடைக்குச் சென்ற பிரபாகரன் அங்கு அவருடன் சண்டைமிட்டு உள்ளார்

மேலும் அவரது நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை அடித்துள்ளார். அப்போது மது போதையில் இருந்த பிரபாகரன் அங்கியிருந்த கத்தரிக்கோலை எடுத்து இந்திரானின் காதில் ஓங்கி குத்தினார். இதில் ரத்தம் சொட்ட சொட்ட இந்திராணி சம்பவ இடத்திலேயே மயக்கமடைந்தார் இதனையடுத்து அருகிலிருந்தவர்கள் இந்திராணியை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்திராணி சம்பவ இடத்திலேயே மயக்கம் அடைந்ததால் பயந்துபோன பிரபாகரன் உடனடியாக வியாசர்பாடி காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். வியாசர்பாடி போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இந்திராணியிடம் புகாரைப் பெற்றுக்கொண்டு பிரபாகரன் மீது வழக்குப்பதிவு செய்த கொடுங்கையூர் போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!