கொடுங்கையூரில் வழக்கு சம்மந்தப்பட்ட ஆட்டோக்கள் தீயில் எரிந்து சேதம்

கொடுங்கையூரில் வழக்கு சம்மந்தப்பட்ட ஆட்டோக்கள் தீயில் எரிந்து சேதம்
X

தீயில் எரிந்து சேதமடைந்த ஆட்டோக்கள். 

கொடுங்கையூரில் வழக்கு சம்பந்தப்பட்ட ஆட்டோக்கள் தீயில் எரிந்து சேதம்

சென்னை கொடுங்கையூர் கண்ணதாசன் நகர் 5 வது பிரதான சாலை பகுதியில் கொடுங்கையூர் காவல் நிலையத்தில் வழக்குகளில் தொடர்புடைய ஆட்டோக்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. நேற்று காலை ஆறு மணி அளவில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 ஆட்டோக்கள் தீப்பற்றி எரிந்தன.

இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் கொடுங்கையூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற கொடுங்கையூர் காவல் நிலைய போலீசார், பொதுமக்கள் உதவியுடன தண்ணீர் ஊற்றி ஆட்டோவில் எரிந்த தீயை அணைக்க முற்பட்டனர். இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் அங்கு வந்த தீயணைப்புத் துறையினர், தீயை அணைக்க முற்பட்டனர். அதற்குள் 2 ஆட்டோக்கள் முற்றிலுமாக எரிந்து நாசமாயின. நீண்ட இழுபறிக்குப் பின்னர், தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதுகுறித்து கொடுங்கையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்/ வழக்குகளில் சம்பந்தப்பட்ட ஆட்டோ என்பதால் மர்ம நபர்கள் தீ வைத்து எரித்தனரா அல்லது தற்செயலாக நடந்த சம்பவமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்