போதையில் டிரான்ஸ்பார்மர் மீது ஏறியவர் மீது மின்சாரம் பாய்ந்தது

போதையில் டிரான்ஸ்பார்மர் மீது ஏறியவர் மீது மின்சாரம் பாய்ந்தது
X

காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் கார்த்தி.

போதையில் டிரான்ஸ்பார்மர் மீது ஏறி ரகளையில் ஈடுபட்ட வாலிபர், மின்சாரம் பாய்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சென்னை கொடுங்கையூர் எருக்கஞ்சேரி கிருஷ்ணமூர்த்தி சாலை பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக், வயது 30 இவர், பேசின்பிரிட்ஜ் மின்சார வாரியத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார். நேற்று இரவு தனது அறையில் நண்பர்களுடன் மது அருந்திவிட்டு, இரவு 12 மணியளவில் கொடுங்கையூர், எருக்கஞ்சேரி, அண்ணாசாலை பகுதியில் உள்ள மின்சார வாரியத்திற்கு சொந்தமான டிரான்ஸ்பார்மர் மீது ஏறி ரகளையில் ஈடுபட்டுள்ளார்

நண்பர்கள் எவ்வளவோ கூறியும் கேட்காமல், தொடர்ந்து டிரான்ஸ்பார்மர் மீது ஏறியபோது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில், கை இரண்டு தோள்பட்டை முழுவதும் காயம் ஏற்பட்டு, தூக்கி வீசப்பட்டார். இதனையடுத்து கார்த்திக்கின் நண்பர்கள், 108 ஆம்புலன்ஸ் மூலம், அவரை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு 20 சதவீத தீக்காயங்களுடன் கார்த்திக் சிகிச்சை பெற்று வருகிறார். கொடுங்கையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்