முழு ஊரடங்கு எதிரொலி: வடசென்னையில் வெறிச்சோடிய சாலைகள்
தமிழகத்தில் ஒவ்வொருநாளும் கொரோனா நோய்த்தொற்று வேகமாக பரவிவரும் நிலையில் இரவு மற்றும் ஞாயிற்று கிழமை முழு ஊரடங்கு என கடந்த 5 ஆம் தேதி தமிழக அரசு அறிவித்தது.
இந்நிலையல் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் இன்று இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு தற்போது நடைமுறையில் உள்ளது.
நேற்று இரவு 10 மணியிலிருந்து திங்கள் காலை 5 மணிவரை இடைவிடாது 31 மணிநேரம் ஊராடங்கால், சென்னையின் பல பகுதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
குறிப்பாக குறுகிய இடவசதி கொண்ட வடசென்னையில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் பல இடங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன. பெரம்பூர் பேருந்து நிலையம், பெரம்பூர் ரயில் நிலையம் ,மூலக்கடை சந்திப்பு, வியாசர்பாடி ஜீவா மேம்பாலம், கணேசபுரம் மேம்பாலம், புளியந்தோப்பு பகுதி, கொளத்தூர் 200 அடி சாலை. பேப்பர் மில்ஸ் ரோடு உள்ளிட்ட பல பகுதிகளில் போலீசார் தடுப்புகள் அமைத்து இரு சக்கர வாகனத்தின் செல்பவர்களிடம் அதற்கான காரணங்களை கேட்டு அனுப்பி வைத்து வருகின்றனர்.
இன்று காணும் பொங்கல் என்பதால் எப்போதும் பொதுமக்கள் வெளியே சென்று வருவது வழக்கம். ஆனால் இந்த முறை பொதுமக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது..
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu