புளியந்தோப்பு துணை கமிஷனர் அலுவலகத்தை சட்டக்கல்லூரி மாணவர்கள் முற்றுகை

புளியந்தோப்பு துணை கமிஷனர் அலுவலகத்தை  சட்டக்கல்லூரி மாணவர்கள் முற்றுகை
X

சென்னை புளியந்தோப்பு போலீஸ் துணை கமிஷனர் அலுவலகத்தை வக்கீல்கள் மற்றும் சட்டக்கல்லூரி மாணவர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

சென்னை புளியந்தோப்பு துணை கமிஷனர் அலுவலகத்தை சட்டக்கல்லூரி மாணவர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

சென்னை கொடுங்கையூர் எம். ஆர். நகர் சந்திப்பு அருகே கடந்த வியாழனன்று அதிகாலை கொடுங்கையூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது வியாசர்பாடி புது நகர் பகுதியைச் சேர்ந்த அப்துல்ரஹீம் (21 )என்ற நபர் அவ்வழியாக சென்று கொண்டிருந்தார். முக கவசம் அணியாமல் சென்றதால் போலீசார் அவரிடம் முக கவசம் அணியும் படி அறிவுறுத்தினர். அப்பொழுது போலீசாருக்கும் அப்துல் ரஹீமுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு அப்துல் ரஹீம் அங்கு பணியில் இருந்த காவலர் உத்திர குமாரை தாக்கியதாக கூறப்படுகிறது

இதனை அடுத்து உத்திர குமார் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த கொடுங்கையூர் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அப்துல் ரஹீமை கைது செய்த போலீசார் அவரை கடுமையாக தாக்கியதாகவும் இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் அப்துல் ரஹீம் தரப்பில் சென்னை மாநகர கமிஷனருக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.

இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிட்ட சென்னை மாநகர கமிஷனர் கொடுங்கையூர் காவலர் உத்திர குமார் மற்றும் ஏட்டு பூமிநாதன் ஆகிய இருவரையும் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டார்.

பின்னர் இருவரும் துறை ரீதியான நடவடிக்கை உட்படுத்தப்பட்ட சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதனையடுத்து சம்பவத்திற்கு காரணமான ஆய்வாளர் நசீமாவை பணியிடை நீக்கம் செய்ய வலியுறுத்தி சென்னை ஓட்டேரியில் உள்ள புளியந்தோப்பு துணை ஆணையர் அலுவலகத்தில் இன்று மதியம் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் மற்றும் சட்டக் கல்லூரி மாணவர்கள் இணைந்து சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் தரையில் அமர்ந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது கூட்டத்தில் பேசிய வழக்கறிஞர் மற்றும் சட்டக் கல்லூரி மாணவர்கள் அப்பாவி சட்டக்கல்லூரி மாணவர் மீது தாக்குதல் நடத்திய இரண்டு காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது போதாது எனவும் அவர்கள் இருவர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் அவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையில் திருப்தி இல்லை எனவும் மேலும் காவல் ஆய்வாளர் நசீமா மீது துறை ரீதியான நடவடிக்கை மற்றும் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்பட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டு கைது செய்யப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் துணை கமிஷனர் ஈஸ்வரன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!