வியாசர்பாடியில் கல்லூரி மாணவர்களுக்கு வகுப்பெடுத்த துணை போலீஸ் கமிஷனர்

வியாசர்பாடி கலை அறிவியல் கல்லூரியில் போலீஸ் ஏசி ராஜேஷ் கண்ணா மாணவர்கள் மத்தியில் பேசினார்.
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருவதால் கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் தற்போது திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. சென்னையில் பல்வேறு இடங்களில் மாணவர்கள் சமீபத்தில் பஸ் டே கொண்டாட்டத்தில் ஈடுபட்டு பல மாணவர்கள் கைதாகினர்.
குறிப்பாக கீழ்ப்பாக்கம் மற்றும் பெரம்பூர் பகுதிகளில் பல கல்லூரி மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனை தடுக்கும் வகையில் பல்வேறு கல்லூரிகளுக்கு போலீசார் நேரில் சென்று மாணவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தனர். கொஞ்ச நாட்களாக மாணவர்கள் பேருந்துகளில் படிக்கட்டில் தொங்கிக் கொண்டு செல்வதும் பயணிகளுக்கு தொல்லை கொடுக்கும் வகையில் நடந்துகொள்ளும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் பரவி பொதுமக்களிடம் ஒருவித அச்ச உணர்வை ஏற்படுத்தியது.
இதனை களைய போலீசார் பல்வேறு கல்லூரிகளுக்கு நேரில் சென்று மாணவர்களிடம் பொது இடங்களில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து வகுப்புகள் எடுத்து வருகின்றனர் அதன் ஒரு பகுதியாக வியாசர்பாடி அம்பேத்கர் கலைக்கல்லூரியில் புளியந்தோப்பு துணை கமிஷனர் ராஜேஷ் கண்ணா மேற்பார்வையில் மாணவர்களுக்கான நன்னடத்தை நிகழ்ச்சி நேற்று நடத்தப்பட்டது.
இதில் வியாசர்பாடி உதவி கமிஷனர் . தமிழ்வாணன் இன்ஸ்பெக்டர் அம்பேத்கர். உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியில் பேசிய துனண கமிஷனர் ராஜேஷ்கண்ணா மாணவர்கள் தங்களின் எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு பஸ்டே கொண்டாடுவதை தவிர்க்க வேண்டும்.
ஒரு முறை நீங்கள் வழக்கில் மாட்டி கொண்டால் அது உங்களது வாழ்க்கையில் பல்வேறு திருப்பங்களை ஏற்படுத்தும் குறிப்பாக உங்கள் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டால்்உங்களுக்கு வேலை கிடைப்பது கடினம் ஆகிவிடும். சில மாணவர்கள் சிறுவயதிலேயே போதைப் பொருட்களுக்கு அடிமையாகி தங்களது வாழ்க்கையை தாங்களே கெடுதது வருகிறீர்கள்.
இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடாமல் மாணவர்கள் தங்களின் பெற்றோர் மற்றும் குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு ஒழுக்கமாக வாழ வேண்டும் தற்போது வேகமாக வளர்ந்து வரும் நவீன காலத்திற்கு ஏற்ப மாணவர்கள் தங்களை தாங்களே வளர்த்துக் கொள்வதோடு பெற்றோர்களுக்கும் பயனுள்ள முறையில் நடந்து கொள்ள வேண்டும் தேவையற்ற கவர்ச்சி விளம்பரங்களை நம்பி ஏமாறாமல் நல்ல விஷயத்தை தேர்ந்தெடுத்து நல்ல சமூகம் உருவாக காரணமாக அமைய வேண்டும் என பேசினார். நிகழ்ச்சியில் அம்பேத்கர் கலைக் கல்லூரியின் முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் கல்லூரி மாணவர்கள் என ஏராளமானோர் கலந்துகண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu