எம்கேபி நகர் பகுதியில் ஒரே பள்ளியில் 28 மாணவ, மாணவியருக்கு கொரோனா

எம்கேபி நகர் பகுதியில் ஒரே பள்ளியில் 28 மாணவ, மாணவியருக்கு கொரோனா
X
எம்கேபி நகர் பகுதியில், ஒரே பள்ளியைச் சேர்ந்த 28 மாணவ மாணவியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை எருக்கஞ்சேரி டீச்சர்ஸ் காலனி மறைமலை அடிகள் தெருவில் செயிண்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் ஒன்று முதல் பிளஸ் டூ வரை மாணவ மாணவியர் கல்வி பயின்று வருகிறார்கள். கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக, தமிழக அரசு ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் நடத்த தடை விதித்துள்ளது. பொதுத்தேர்வு எழுதும் 10.11.12ஆம் வகுப்பு மாணவ மாணவியர்களுக்கு மட்டும், பள்ளிகளில் நேரடி வகுப்பு நடத்த அரசு அனுமதி அளித்துள்ளது.

இந்நிலையில் சென்னையில் உள்ள செயிண்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளியி 10.11.12ல் நேரடி வகுப்புகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. நேற்று முன்தினம் மண்டலம் 4 சுகாதாரத்துறை சார்பில், 10.ஆம் மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்கள் 60 பேருக்கு, கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது

இதன் முடிவுகள், இன்று காலை வெளியானது. அதில், 28 மாணவ. மாணவியருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து மண்டலம் 4 சுகாதாரத்துறை சார்பில் அந்த பள்ளியில் நோய்தொற்று கண்டெடுக்கப்பட்ட மாணவர்களை சுகாதாரத்துறை சார்பில் தனிமைப்படுத்தும் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த மாணவர்களின் பெயர் பட்டியலை வைத்து அந்த மாணவர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கையை சுகாதாரத்துறை ஆய்வாளர்கள் மேற்கொண்டு வருகின்றார்கள். தொடர்ந்து அந்த பள்ளியில் பயின்ற மற்ற மாணவ மாணவியருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி