பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் சேகருக்கு கொரோனா தொற்று பாதிப்பு

பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் சேகருக்கு கொரோனா தொற்று பாதிப்பு
X

ஆர் டி சேகர்

பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் சேகருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாள்தோறும் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அரசியல் பிரபலங்கள், நடிகர்கள், போலீஸ் உயர் அதிகாரிகள் என பலரும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

அவ்வகையில், சென்னை பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர் டி சேகர், சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். அவருக்கு நேற்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது என்று உறுதி செய்யப்பட்டது. அவரது மனைவிக்கும் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இருவரும் வீட்டிலேயே தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.

Tags

Next Story