வியாசர்பாடியில் 150 ஆண்டு பழமை வாய்ந்த கோவில் குளம் தூர்வாரும் பணி துவக்கம்
பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி சேகர், 37வது மாமன்ற உறுப்பினர் டில்லிபாபு மற்றும் தண்டையார்பேட்டை மண்டல அதிகாரிகள் ஆகியோர் கோவில் குளத்தை ஆய்வு செய்தனர்.
வியாசர்பாடியில் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில் குளம் தூர்வாரும் பணி துவக்கம்.
சென்னை வியாசர்பாடி சாமியார் தோட்டம் பகுதியில் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த கரபாத்திர சிவப்பிரகாசம் ஜீவசமாதி கோவில் உள்ளது. இங்குள்ள ஜீவ சமாதி கோவிலுக்கு வியாசர்பாடி பகுதியில் மட்டுமலலாமல் சென்னையில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் வந்து செல்வது வழக்கம். இந்த கோவில் சுற்றுச்சுவர் பாழடைந்து கோவில் குளம் ஆகாயத்தாமரை செடிகளால் சூழ்ந்து பாழடைந்து உள்ளதாகவும் எனவே கோவில் குளத்தை சுத்தம் செய்து தர வேண்டுமென அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தனர்.
இதனையடுத்து பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி சேகர், 37வது மாமன்ற உறுப்பினர் டில்லிபாபு மற்றும் தண்டையார்பேட்டை மண்டல அதிகாரிகள் நேற்று இந்த கோவில் குளத்தை ஆய்வு செய்து மாநகராட்சி ஊழியர்களை வைத்து கோவில் குளத்தை சீரமைக்கும் பணியினை துவக்கி வைத்தனர். அடுத்த மூன்று நாட்களுக்குள் கோவில் குளம் முழுவதும் சீரமைக்கப்பட்டு மக்கள் பயன்படுத்துவதற்கு ஏதுவாக இருக்கும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu